6.6 தொகுப்புரை

    இப்பாடத்தைப் படித்தபின் நீங்கள் பெயரடை, வினையடை என்பன பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள். மரபு இலக்கணிகள் தமிழ் மொழியைப் பழங்காலத்திற்கு ஏற்றாற்போல் நான்கு வகைகளாகப் பிரித்தனர் என்பதையும் மொழி வளரும் தன்மை கொண்டிருந்ததால் அது காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வந்ததையும் அறிந்தீர்கள். தமிழ்மொழியை எவ்வாறான இலக்கணக்கூறுகளாகப் பிரித்து ஆண்டனர் என்பதை உணர்ந்தீர்கள். ஒரு மொழியைச் சாதாரணமாகப் பயிலும்போது ஒருவிதமாகவும் அதனையே மொழியியல் அடிப்படையிலும் தொடரியல்     அமைப்பிலும் ஆராயும்போது     வேறுவிதமாகவும்     இலக்கணக்கூறுகள் தேவைப்பட்டன என்பது     பற்றியும்     அறிந்திருப்பீர்கள். தமிழ்மொழியின் வளர்ச்சியில் காலந்தோறும் பெயரடைகளும் வினையடைகளும் எவ்வாறு கையாளப்பட்டு வந்தன என்பதைத் தக்க சான்றுகள் வாயிலாக அறிந்தீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தமிழில் வினையடைகள் எவ்வாறு உருவாகின்றன?
2.
சங்க காலத்தில் வழங்கிய வினையடைகளில் எவையேனும் மூன்றனைக் குறிப்பிடுக.
3.
வினையடையை மொழியியலார் எத்தனை வகையாகப் பிரிக்கின்றனர்? அவை யாவை?
4.
ஆக்க வினையடை விகுதிகள் யாவை?
5.
பின்வரும் தொடர்களில் வரும் வினையடைகளையும் பெயரடைகளையும் தனித்தனியே     பிரித்துக் குறிப்பிடுக.