|
5.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை சொற்பொருள் மாற்ற வகைகள்
குறித்து, பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்
பாடத்திலிருந்து என்னென்ன கருத்துக்களையெல்லாம்
தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும்
ஒருமுறை
நினைவுகூர்ந்து பார்க்கலாம்.
- மொழியாய்வில்
சொல் உணர்த்தும் பொருளில் ஏற்படும்
மாற்றத்திற்கான பல்வேறு காரணங்களை விரிவாகத்
தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
- மேலைநாட்டுச் சொற்பொருளியல் அறிஞரான உல்மன்
அவர்கள் கூறும் சொற்பொருள் மாற்றத்தின் பலவகைகளை
அறிந்து கொண்டீர்கள்.
- பழமையான மொழியான நம் தமிழ்மொழியில் அமைந்துள்ள
சொற்பொருள் மாற்றத்தின் பற்பல வகைகளையும், அவ்வாறு
ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும்
பற்பல சான்றுகளின் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து
கொண்டிருப்பீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
‘கவலை’ என்னும் சொல் தரும் இருபொருளைக்
குறிப்பிடுக.
|
|
2.
|
‘இழவு’ என்ற சொல் உணர்த்தும் தற்காலப்பொருள்
என்ன?
|
|
3.
|
மங்கல வழக்கு எனக் குறிப்பிடப்படுவது எது?
|
|
4.
|
‘குட்டி’ என்ற சொல் எவ்வெவற்றின் இளமைப் பெயர்? |
|
5.
|
உல்மனின் சொற்பொருள் மாற்ற வகைகளைக்
குறிப்பிடுக.
|
|
|