திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்னும் ஊரில் சுந்தரர் பிறந்தார். சைவ அந்தணர் குலத்தவரான இவர் தந்தையார் பெயர் சடையனார். தாயார் பெயர் இசை ஞானியார். நம்பியாரூரன் என்பது இவரது பிள்ளைத் திருநாமம். நம்பியாரூரருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மிக்க கோலாகலமாக மணமேடையில் நம்பியாரூரரும் மணப்பெண்ணும் வீற்றிருந்தனர். உற்றார். பெற்றோர் உறவினர் யாவரும் மணப்பந்தலில் மகிழ்வோடு இருந்தனர். மணவினைகள் தொடங்கும் நேரம். அப்பொழுது அங்கு ஒரு முதியவர் வந்து, "இதோ! இங்கு மணமகனாக வீற்றிருக்கும் நம்பியாரூரன் என்னுடைய அடிமை, இவனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண்டு" என்றார். திருமணம் தடைப்பட்டது.
கோபமடைந்தார் நம்பியாரூரர். "நீர் பித்தன்" என்று திட்டினார். "நான் உமக்கு அடிமையா? அதற்கான ஓலையைக் காட்டும்" என்றார். முதியவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கினார். அதைக் கிழித்து எறிந்தார். ஆனால் முதியவர் சிரித்தார். "திருவெண்ணெய் நல்லூருக்கு வாரும். நீர் எனக்கு அடிமை என்பதை அங்குக் காட்டுவேன்" என்றார். வேகமாக முன் சென்றார் முதியவர். பின் தொடர்ந்தார் நம்பியாரூரர். சுற்றத்தார் யாவரும் உடன் சென்றனர். முதியவர் திருவெண்ணெய் நல்லூர் கோயிலுள் புகுந்தார். பின் மாயமாய் மறைந்தார். தன்னைத் தடுத்து ஆட்கொள்ள வந்தவர் சிவபெருமான் என்பதை நம்பியாரூரர் கருதினார். ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். இறை அன்பில் திளைத்து நின்ற நம்பியாரூரர், இனிய தமிழில் இறைவனைப் போற்றிப் பாடினார் 2.4.1 நம்பியாரூரரின் முதல் பாடல் இனிமையான இந்தளப் பண்ணில்"பித்தா" எனத் தொடங்கித் தேவாரம் பாடினார். இதோ அப் பாடல். அவர் பாடிய முதல் பாடலை இப்பொழுது கேட்போமா ? பண்: இந்தளம்
(ஏழாம் திருமுறை, 7225) (பித்தன் = பேருரள் உடையவன் (சிவனைக்குறிப்பது), பிறைசூடி= சந்திரணை அணிந்தவன், எத்தான் = எவ்வாற்றாலும், அருள்துறை = கோயிலின் பெயர், அத்தா = தலைவா) திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். சுந்தரமான அழகுடன் விளங்கியதால் ‘சுந்தரர்’ ஆனார். சுந்தரர் இறைவனிடம் தோழமை உறவு கொண்டார். இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார். திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண். பூவுலகில் பதியிலார் குலத்தில் பிறந்த இவரைச் சுந்தரர் கண்டார். கண்ட கணமே, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். காதல் கொண்டனர். இருவரும் மணந்து கூடி மகிழ்ந்தனர்.
சில காலத்திற்குப் பின் தல யாத்திரை சென்றார் சுந்தரர். அக்காலத்தில் திருவொற்றியூர் என்னும் ஊரில் சங்கிலியார் என்னும் அழகிய பெண்ணைக் கண்டார். கண்டதும் காதல் கொண்டார் சுந்தரர். அவளை மணக்க விரும்பினார். சுந்தரர் விருப்பம் நிறைவேறியது. எப்பொழுதும் கழுத்தில் மாலைகள் அசைய அழகுடன் விளங்கினார் சுந்தரர். இருந்தும் மனத்தால் இறை அடியார்களுக்கெல்லாம் அடியவனாகத் தன்னை எண்ணினார். சிவனடியார்களை வணங்கி மதித்தார். சிவனடியார் பெயர் ஒவ்வொன்றையும் சொல்லி "இவர்க்கு நான் அடியேன்" என்று பாடினார். கொல்லிக் கௌவாணப் பண்ணில் திருத்தொண்டத் தொகை பாடினார். இதோ! அதன் முதல் பாடலின் முதல் இரண்டு அடிகளைப் பார்க்கலாம். பண்: கொல்லிக் கௌவாணம்
(ஏழாம் திருமுறை,7617) சம்பந்தர், அப்பர் போலச் சுந்தரரும் பல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்பர். முதலை வாய்ப்பட்ட பிள்ளையை மீட்டுக் கொடுத்தது அவ்வகையான அற்புதங்களில் ஒன்று என்பர். "எற்றான் மறக்கேன்" எனத் தொடங்கித் தேவாரப் பதிகத்தைச் சுந்தரர் பாட, விழுங்கிய பிள்ளையை முதலை உயிருடன் வெளியே கக்கியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் சுந்தரருக்குத் தாம் இம் மண்ணுலகில் வாழ்ந்த காலம் போதும் என்ற உணர்வு ஏற்பட்டது. சிவனை நினைந்தார். "தலைக்குத் தலை மாலை" என்ற தேவாரப் பதிகம் பாடினார். சுந்தரர் தமது முதல் பதிகத்தை இந்தளப் பண்ணில் பாடினார் அல்லவா? அதே இந்தளப் பண்ணில் கடைசிப் பதிகத்தையும் பாடினார். அவர் மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் பாடிய கடைசிப் பதிகம் இதுவே. சுந்தரரைத் திருக்கயிலைக்கு ஏற்றிச் செல்ல வெள்ளை யானையை இறைவன் அனுப்பி வைத்தார். வெள்ளை யானை மேல் ஏறிய சுந்தரர் திருக்கயிலாயம் சென்றார். தாம் யானை மேல் ஏறிச்சென்ற செய்தியைச் சுந்தரர் திருநொடித்தான் மலைப் (கயிலாயம்) பதிகத்தில் கூறுகின்றார். இப்பதிகம் பஞ்சமம் என்னும் பண்ணில் அமைந்துள்ளது. திருக்கயிலையில் சிவபெருமானும் உமை அம்மையாரும் சுந்தரரை வரவேற்றனர். சுந்தரரும் சிவானந்த வெள்ளத்துள் அழுந்தி முத்தி பெற்றார். சுந்தரர் பாடிய தேவாரப் பதிகங்களின் தொகை 38,000 எனப்படுகிறது. இவையெல்லாம் பண்ணோடும் தாளத்தோடும் அமைந்தவை. தேவார மூவருள் இவர் இறைவனிடம் தோழமை உறவு பூண்டு வாழ்ந்தவர். எனவே ‘தம்பிரான் தோழன்’ என்றும் அழைக்கப்படுவார். சுந்தரர்
பாடிய பாடல்களைத் திருப்பாட்டு என்பர்.
இதனையும் தேவாரம் என்ற பெயரால் அழைப்பர்.
இவர்
பாடிய பாடல்கள் பண் சுமந்த பாடல்கள்
ஆகும். இவர்
பாடிய பதிகங்களில் 100 கிடைத்துள. இவை
பதினேழு
பண்களில் அமைந்துள.
சுந்தரர் பாடிய
பண்களில் செந்துருத்திப்
பண்
மிகவும் சிறப்பானதொரு பண்ணாகும்.
இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும்
பாடவில்லை. மீளா
அடிமை என்று தொடங்கும் பாடலில் (பதி-95) இப்பண்
இடம் பெறுகிறது. இது ஒரு மங்கலகரமான
பண்ணாகும்.
அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது. |