பாடம் - 4

D05144 பரதநாட்டியம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பரதநாட்டியம் பழமையான கலை என்று விளக்கி கோவிலும் நடனமும் ஒரு காலத்தில் இணைந்திருந்த நிலையையச் சுட்டிக் காட்டுகிறது. மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் குறிப்பிடுகிறது.

ஆடல் முறையின் நிருத்தம் நிருத்தியம் நாட்டியம் என்ற மூன்று தன்மைகளை விளக்கி நான்குவகை அபிநயம் நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்கள் அதாவது அலாரிப்பு, ஜதிசுரம் வர்ணம் போன்றவையும் விரிவாகக் கூறப்படுகிறது.

ஆடலுக்கு இசை உயிர் என்பதால் பக்க இசையாளர் பற்றியும் பேசப்படுகிறது. வழிமுறைக் கலைஞசர் என்று பரம்பரைக் கலைஞர்கள் சிலரும் ஆர்வக் கலைஞர் என்று வேறு சிலரும் அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.

உலகளாவிய நிலையில் இன்று பரநாட்டியம் பெற்றுள்ள பெருமையும் சிறப்பும் பேசப்படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பரத நாட்டியக் கலையின் பாரம்பரியம் (tradition) எத்தகையது என்பதை இனங்காணலாம்.

  • பரத நாட்டியத்தின் முக்கிய அம்சங்கள் யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • பரத நாட்டியக் கச்சேரி உருப்படிகள் (items) என்னென்ன என்பதைப் பட்டியலிடலாம்.


  • பரத நாட்டிய நிகழ்ச்சியில் பக்க இசை (musical accompaniment), பெறும் பங்கினை மதிப்பிடலாம்.

  • பரத நாட்டியக் கலைஞர்கள் யார் யார் என்பதை அடையாளங் காணலாம்.

  • பரத நாட்டியத்தின் புகழ் பெற்றவர்களின் பெயர்களை வரிசைப்படுத்தலாம்.

பாட அமைப்பு