தன் மதிப்பீடு - I : விடைகள் | |
2. | திரு.வி.க.வின் உரைநடையின் வடிவத்தைவிளக்குக. திரு.வி.க. உரைநடையின் பொருளில் புதுமை கண்டது போலவே வடிவத்திலும் வளர்ச்சியை ஊட்டினார். உரைநடையின் பொருளில் புதுமை கண்டவர் திரு.வி.க. அதைப் போலவே, உரைநடையின் வடிவத்திலும் அவர் வளர்ச்சியை ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. உரைநடையின் வடிவ வளர்ச்சிக்கு அவர் வழங்கிய நடை, உரைநடையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றதாகும். சிறுசிறு தொடர்களால், பல்வேறு உணர்ச்சிகளையும் முறையாக வெளிப்படுத்தும் குறியீடுகளுடன் துள்ளல் அமைப்பில், உள்ளத்துக் கருத்துகளுக்கேற்பச் சொற்களைப் புகுத்திய அழகுநடையை உருவாக்கியவர்களுள் திரு.வி.க. தலைசிறந்தவராவார். |