எழுத்தாளர்கள் சிறுகதை, புதினம், நாடகம் முதலிய எந்த வடிவத்தில் எழுதினாலும் மாற்றங்கள் தோன்றுவதில்லை. ஆனால் கோவி.மணிசேகரனின் உரைநடை பலவகையில் அமைகின்றது. புதினத்தில் காட்சிக்கென்று ஒரு நடை; சிறுகதையில் உணர்ச்சிக்கென்று ஒரு நடை; நாடக உரையாடலுக்கு உகந்ததாக மற்றொரு நடை என்று இவரின் உரைநடையை வகைப்படுத்தலாம். எனினும், கோவி.மணிசேகரனின் உரைநடையைப் பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்திக் காண்பது பொருத்தம் உடையது ஆகும். அவை,
என்பவை. இனி இவை ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாகக் காண்போம்.
செந்தமிழ் நடை என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளுவோம். அப்போதுதான் இத்தகு நடை கோவி.மணிசேகரனின் உரைநடையில் அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பிறமொழிச் சொல் கலவாமல் எழுதுவதும், எழுத்து, சொல், தொடர் இலக்கணப் பிழையின்றி எழுதுவதும், இனிய தமிழில் எழுதுவதும் செந்தமிழ் நடையாகும். இவ்வகை நடைக்கு ஓர் எடுத்துக் காட்டைக் காண்போம். “அந்த நாள் வந்தது. அழகின் திருக்கோலம் பூண்ட வேலுநாச்சியின் ஆயுள் அன்றுடன் முடிவு பெற்றிருக்க வேண்டும். கரிய பெரிய வயிற்றுடனும் பயணமானான்.” இந்தத் தொடர்களில் அமைந்திருக்கும் தமிழின் இனிமையை நினைவில் நிறுத்துங்கள்.
இலக்கிய நடை என்பதை ஆசிரியரின் கற்பனை வளத்தை எடுத்துக் காட்டும் கவிதை நடை எனக் கூறலாம். கோவி.மணிசேகரனின் இலக்கிய நடைக்கு ஓர் எடுத்துக் காட்டைக் காண்போமா? “கீழ் வானத்தில் யாரோ பொன்னைக் கொட்டிக் குவிக்கிறார்கள்! வண்ணக் கதிரவனுடைய வருகையில் தான் வான் பணியேவலர்களுக்கு எத்துணைச் சிரத்தை! எங்கும் சித்திர விசித்திரமான முகிற் கோலங்கள்! வைகறையின் ஞானக்கண் ஒளிமயமாகத் திகழ்ந்தது.” இதில் காலைக் கதிரவனின் வருகையைக் கோவி.மணிசேகரன் இலக்கிய நயம் மிளிர எடுத்துக் காட்டியுள்ளார். நாவலிலும் சிறுகதையிலும் கதைமாந்தர்களின் உரையாடல் உயிரோட்டமாக அமைதல் வேண்டும். எனவே உரையாடல்களாக, வருமிடங்களில் ஆசிரியர் தனிவகை நடையைக் கையாள வேண்டும். முற்போக்குக் கருத்தை வலியுறுத்த விரும்பும் கோவி.மணிசேகரனின் கதைமாந்தர் ஒருவரின் பேச்சிலே அமைந்த உரையாடல் நடையைப் பாருங்கள். “சுத்தப் பிதற்றல், பிறகு ஆஸ்பத்திரிகளும் டாக்டர்களும் தேவையே இல்லை. இதோ பாருங்கள். பூசை செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இம்மாதிரியான பாமரப் பிரார்த்தனை தேவை இல்லை என்றுதான் சொல்லுகிறேன்.” சிறு சிறு தொடர்கள் அமைந்த நடை, பேசுபவரின் உணர்ச்சியையும் வேகத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது அல்லவா? தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதுவது மணிப்பிரவாளம் என்னும் நடையாகும். ஆனால் இன்றுள்ள புத்திலக்கியப் படைப்பாளர்கள் தமிழும் வடமொழியும் என்பதற்குப் பதிலாகத் தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதி வருகின்றனர். கோவி.மணிசேகரனின் படைப்புகளில் இவ்விருவகைக் கலப்பு நடையும் காணப்படுகின்றன. முதலில் தமிழோடு வடமொழிச் சொற்களைச் சேர்த்து எழுதும் இவரின் உரைநடைக்கு எடுத்துக் காட்டுக் காண்போம். “அதோ சக்தி வந்து விட்டாள்! அழகுக்கு அணி செய்ய வந்து விட்டாள்! அணிகளுக்கு அற்புதம் காட்ட வந்து விட்டாள்! அற்புதத்தில் அற்புதமாய் விளங்க வந்து விட்டாள். சட்சமும் (ச), பஞ்சமமும் (ப) சேர்த்து விட்டாள். ஏழு சுரங்களும் இணைந்தன. அடிப்படைச் சுரங்கள் - அசையாச் சுரங்கள், பேதமற்ற சுரங்கள், ஏகம், அநேகமாய், வியாபகமாய், அதிவியாபகமாய், நித்தியமாய், நின்றிலங்கிய நாத வடிவம் - அஃது!” இதில் வடமொழிச் சொற்கள் வளர்தமிழ்ச் சொற்களோடு கலந்துள்ளதை உற்று நோக்குங்கள். “நானும் அந்த டேஸ்டை அனுபவித்து, தெரிந்து புரிந்து பிறகு விளக்குறேனே” “யூ மீன்....” “யூ, மீன். . . ஒய் நாட் ஐ எஞ்சாய், வாட் யூ எஞ்சாய்ட்” மேலே கண்ட பத்தியில் இருவருக்கு இடையிலான உரையாடலில் ஆங்கிலச் சொற்களும் ஆங்கிலத் தொடர்களும் தமிழோடு சேர்ந்து கலப்பு நடையாகி இருப்பதைக் காணமுடிகிறது. கதைமாந்தர்கள் பேசும் நடையிலேயே அவர்தம் உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று கருதும் எழுத்தாளர்கள், பேச்சில் அமையும் சொற்களை அப்படியே எழுதுகின்றனர். இவ்வகை உரைநடையில் சொற்களின் சிதைந்த வடிவங்கள் அமைந்து விடுகின்றன. “அழகுதான் போங்களேன்! நீங்க கொண்டாந்து கொடுத்த நாளுமில்லை; நான் சிரிச்ச நாளுமில்லை. வெறுமனே வாயை மூடிக் கிட்டுக் கிடங்க” இந்த எடுத்துக்காட்டில் ‘கொண்டு வந்து’ என்ற இரு சொற்கள் சிதைந்து சேர்ந்து ‘கொண்டாந்து’ என்று உருமாறி இருப்பதைக் கவனித்தீர்கள் அல்லவா? தமிழ் மொழியில் எழுத்து மொழி தமிழகம் முழுவதும் ஒரே வகையில் அமைந்துள்ளது. ஆனால் பேச்சு மொழியோ வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகிறது. ஒவ்வொரு வட்டாரப் பகுதிக்கும் என்று தனித்த வகைச் சொற்களும் அமைந்துள்ளன. எனவே கதை மாந்தர்களைப் படைக்கும் கோவி.மணிசேகரன் அக் கதைமாந்தர்கள் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோ, அந்த வட்டாரவழக்குத் தமிழிலேயே உரையாடல்களை அமைக்கிறார். சென்னையும் அதை அடுத்துள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வழக்குத் தமிழ் நடையும் இவரின் படைப்புகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது. “அம்ம காரு; பல்லாவரத்திலே ஒருநாள் கண்ணாலம் பண்ணிக்கிட்டு இருந்தேன் . . . . . . . பசுமாடு லாரியிலே அம்புட்டுச் செத்துப் போச்சு! அந்த ‘காப்ரா’வுலே மிரண்டு ஓடின காளை மாடு இன்னும் கெடைக்கவே இல்லை” மேலே காணும் எடுத்துக் காட்டுப் பகுதியில் சென்னை வட்டாரத் தமிழ்ச் சொற்கள் அமைந்துள்ளன. |
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|
||
5. |
|