6.6 தொகுப்புரை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி அதிகம் பயிலாதவர்.

உழைப்பாளர்களையும், தொழிலாளர்களையும் கவிதையின் பாடு பொருளாக்கியவர்; ஏழை x பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மாறப் பாடியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு எழுதியவர்.

பொதுவுடைமை விரும்பி; வர்க்க எதிர்ப்பாளர்; பெரியார் ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாடலில் பாடியவர்; மூட நம்பிக்கைகளைச் சாடியவர்; சாதி ஏற்றத்தாழ்வு கூடாது எனப் பாடியவர்.

திரைப்படத்தை தம்முடைய கருத்துக்களைச் சொல்ல ஊடகமாகப் பயன்படுத்தியவர்; நல்ல இலக்கியப்படைப்பாளர். இக்கருத்துகளை இப்பாடத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைக்குப் பின்னணியாக இருந்த கவிஞர்கள் யார்?
2)
ஏழைகளின் வேர்வையில் எக்காளம் போடும் கூட்டத்துக்குக் கவிஞரின் எச்சரிக்கை யாது?
3)
திரைப்படக் காதல் பாடலில் தமது தனிப்பட்ட கருத்தோட்டத்தை எவ்வாறு காட்டுகிறார்?
4)
தாலாட்டுப் பாடலில் கவிஞர் காட்டும் இலக்கிய அழகைக் கவிதை வரிகள் கொண்டு காட்டுக.