தன்மதிப்பீடு : விடைகள் - I

5)

தக்கயாகப் பரணியில் உள்ள பரணி உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பரணி இலக்கியத்தில் இடம் பெறும் பகுதிகளை உறுப்புகள் என்று கூறுவர். அந்த வகையில் இப்பரணியில் 11 உறுப்புகள் உள்ளன. அவை

(1) கடவுள் வாழ்த்து
(2) கடை திறப்பு
(3) காடு பாடியது
(4) தேவியைப் பாடியது
(5) பேய்களைப் பாடியது
(6) கோயிலைப் பாடியது
(7) பேய் முறைப்பாடு
(8) காளிக்குக் கூளி கூறியது
(9) கூழ் அடுதலும் இடுதலும்
(10) களங்காட்டியது
(11) வாழ்த்து