தன்மதிப்பீடு : விடைகள் - II

5) இல்பொருள் உவமை அணி என்றால் என்ன?

உலகில் இல்லாத ஒரு பொருளை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி எனப்படும்.

கோயிலைப் பாடியது என்ற பகுதியில் காளிதேவியின் இருக்கையாக ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் என்ற பாம்பு அமைந்துள்ளது. அதன் கண்களுக்கு வடமுகாக்கினி என்ற தீயும்,பற்களுக்கு நஞ்சோடு சேர்ந்த சந்திரனின் அமுத கிரணமும் உவமையாகக் கூறுப்பட்டுள்ளது.

உலகம் அழியும் காலத்தில் தோன்றக்கூடிய தீயாகிய வடவை உலகம் அழியாத இன்று இல்லை. சந்திரன் குளிர்ந்த அமுதகிரணங்களையே (ஒளிக்கதிர்) உடையது. ஆனால் நஞ்சோடு சேர்ந்த கதிர்கள் சந்திரனுக்கு இல்லை. எனவே இவை இரண்டும் இல்பொருள் உவமை அணி ஆகும்.