1.5 தொகுப்புரை | |||||||||||||||||||||||||
பரணி என்ற சிற்றிலக்கிய வகையில் குறிப்பிடத்தக்க ஒரு நூல் தக்கயாகப் பரணி. கவி ராட்சசர் என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. இது ஒரு புறப்பொருள் நூல். இரண்டாம் இராசராசனின் உதவியால் எழுதப்பட்ட இந்த நூலின் பாட்டுடைத்தலைவர் வீரபத்திரக் கடவுள். இவர் தக்கனின் யாகத்தை அழித்த கதையே சிறப்பித்துக் கூறப்படுகிறது. இதில் பல வரலாற்றுச் செய்திகளும், அரிய புராணச் செய்திகளும் இடம் பெறுகின்றன.
இந்த நூலின் அமைப்பு, பாவகை, பரணி உறுப்புகள்,
நூலின் சிறப்பு, ஒட்டக்கூத்தரின் இலக்கியத்திறன் ஆகியவற்றைப் பற்றி நாம் இப்பாடத்தில்
படித்தோம்.
|