செய்யுளில் சொல்லையும் பொருளையும் முறையே வரிசையாக
வைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
இந்நூலில் காளிதேவியின் இருக்கையாகிய ஆதிசேடனை வருணிக்கும்
போது இவ்வணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாயிரும் பய உததித் தொகைஎன
வாள்விடும் திவாகரத்திரளென
ஆயிரம் பணம் அமிதப் பரவையது
ஆயிரம் சிகாமணி ப்ரபையே (154)
பெரிய பாற்கடல் போன்று வெண்மையான ஆயிரம் படங்களையும்,
ஒளிவிடும் சூரியக்கூட்டம் போன்று ஒளிவிடும் ஆயிரம் நாகரத்தினங்களையும் உடையதாக
ஆதிசேடன் காட்சி அளித்தது என்று வரிசையாக உள்ள முதல் இரண்டு வரிகளும் முறையே
மூன்றாவது, நான்காவது வரிகளுக்கு உவமையாகி உள்ளன. எனவே இது நிரல் நிறை அணி
ஆகும்.
|