பாடம் - 1

P10341 தக்கயாகப் பரணி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தக்கயாகப் பரணி என்ற பரணி இலக்கிய நூலைப் பற்றிக் கூறுகிறது. இந்த நூலின் ஆசிரியர் பற்றிச் சொல்கிறது. இந்த நூலின் அமைப்பையும், சிறப்பையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
ஒரு பரணி இலக்கியம் எப்படி அமைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  •  
பரணி இலக்கிய உறுப்புகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
  •  
தமிழில் தோன்றிய பரணி இலக்கிய நூல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  •  
தக்கயாகப் பரணி ஒரு சிறந்த பரணி இலக்கிய நூல் என்பதை அறியலாம்.
  •  
ஒட்டக்கூத்தரின் கவிதைச்சிறப்பையும், இலக்கியத் திறனையும் அறிந்து கொள்ளலாம்.