4.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை
விமலையார் இலம்பகம் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு
படுத்திப் பாருங்கள்.
1) சிந்தாமணி என்றால் என்ன என்பது பற்றியும்,
சீவக சிந்தாமணி கூறும் செய்திகளைப் பற்றியும் அறிந்தீர்கள்.
2) விமலையார் இலம்பகம் கூறும் செய்திகளைப் பற்றி, சிறப்பு நிலையில் விளக்கமாக
அறிந்து கொண்டீர்கள்.
3) கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு
முதலியவற்றால் பிற்காலத்தில் தோன்றிய
காப்பியங்களுக்குச் சீவக சிந்தாமணி அடிப்படையாக விளங்கியதை
அறிய முடிகிறது.
4) சீவக சிந்தாமணியின் ஆசிரியர், பாட்டுடைத் தலைவன், நூலின் இலக்கியச் சிறப்புகள்
முதலியன பற்றி விரிவாக உணர்ந்து கொண்டீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
சீவகனின்
தாய் மாமன் யார் ? |
[விடை] |
2. |
விசயை
கண்ட கனவு யாது ? |
[விடை] |
3. |
விமலை
என்பாள் யார் ? |
[விடை] |
4. |
விமலை
பயின்ற விளையாட்டு என்ன ? |
[விடை] |
5. |
சோதிடன்
கணித்துக் கூறியது என்ன ? |
[விடை] |
6. |
விமலை
பந்தாடுந்திறன் பற்றி எழுதுக. |
[விடை] |
|