பெருங்காப்பியங்கள்
ஐந்தனுள் ஒன்று சீவக சிந்தாமணி. இந்நூலின் எட்டாம்
உட்பிரிவு விமலையார் இலம்பகம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை
இப்பாடம் விளக்குகின்றது.
விசயை,
தன் மகன் சீவகன்பால் கொண்டிருந்த தாயன்பு புலப்படுகின்றது. அறநெறிகளைப்
பின்பற்றி, பகைவனான கட்டியங்காரனை வீழ்த்தி, அரசைக் கைப்பற்றிய தன்
மகன் நல்லாட்சி நடத்த வேண்டும் என்கின்ற அவளது உணர்வு வெளிப்படுகின்ற
நிலையை இப்பாடம் விளக்குகின்றது.
விமலையின்
பந்தாட்டச் சிறப்பும், விமலையைச் சீவகன் மணந்த வரலாறும் விரித்துரைக்கப்
படுகின்றன.
சோதிடக்
கலையின் நுட்பமும், கனவின் சிறப்பும் இங்குத் தெளிவாகக் காட்டி விளக்கப்படுகின்றன.
இந்தப் பாடத்தில் சீவக சிந்தாமணியின் பெயர்க்
காரணமும், நூலின் அமைப்பும், சிறப்பும் குறிப்பிடப் பெறுகின்றன. நூலாசிரியரின்
சிறப்பும் பெருமையும் இப்பாடத்தின் வழி தெரிவிக்கப் பெறுகின்றன.
|