5.3 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கங்கைப் படலத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

இராமாயணத்தில் இடம்பெறும் கங்கைப் படலத்தின் சிறப்புத் தன்மையைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

குகனின் தோற்றம், பண்பு, அவன் இராமன் மீது கொண்டிருந்த பேரன்பு, தன்னால் முடிந்த அளவு உதவ முற்படுதல் போன்ற பல செய்திகளைச் சிறப்பாக அறிந்து இருப்பீர்கள்.

குகனின் அன்பினைக் கண்டு, இராமன் அவனைத் தன்னுடன் பிறந்த தம்பியாக ஏற்றுக்கொண்ட செய்தியினையும் அறிந்திருப்பீர்கள்.

கம்பராமாயணத்தின் சிறப்புகள், நூலாசிரியரின் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதலில் அறிமுகமானவன் யார்?
[விடை]
2. குகன் இராமனிடம் படைத்த பொருள்கள் யாவை?
[விடை]
3. குகனைப் பற்றி, இலக்குவனிடமும் சீதையிடமும் இராமன் என்ன கூறினான்?
[விடை]
4. குகனிடம் இராமன் கூறிய வாக்குறுதி என்ன?
[விடை]
5. முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரால் எவ்வாறு இருந்தனர்?
[விடை]