5.2
கலைச்
சொல்லாக்கமும் அகராதிகளும் |
1875ஆம்
ஆண்டில் ஃபிஷ் கிரீன் என்ற அமெரிக்க
மருத்துவர், எஸ்.சுவாமிநாதன், சாப்மன்
ஆகியோரின்
துணையுடன் மருத்துவம் தொடர்பான கலைச்சொற்களைத்
தொகுத்து நான்கு தொகுதிகள்
வெளியிட்டுள்ளார்.
சொல்லாக்கத்தின் விளைவாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட
கலைச் சொற்களைத் தொகுத்துத் தனியாக அகராதியாக
வெளியிட்டது இதுவே முதன்முறை ஆகும்.
சென்னை மாகாண அரசு 1932இல்
தயாரித்த கலைச்
சொற்களின் அகராதி பெரிதும் சமஸ்கிருதச்
சொற்களின்
ஒலிபெயர்ப்பாக இருந்தது. எனவே இவ்வகராதியினைத்
தமிழறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936இல் வெளியிட்ட
கலைச் சொல் தொகுதி, தரமானதாக
அமைந்திருந்தது.
இத்தொகுதியைப் பின்னர் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
1931இல் மருத்துவம், வேதியியல்,
தாவரவியல் ஆகிய
மூன்று துறைகளுக்கான கலைச்
சொல் அகராதியை
டி.வி.சாம்பசிவம் வெளியிட்டார்.
1957ஆம் ஆண்டில், தமிழக அரசு,
தமிழில் கலைச்
சொற்களை உருவாக்குவதற்காக நியமித்த வல்லுநர்
குழு
ஆட்சிச் சொல் அகராதியை வெளியிட்டது. இதற்குப் பின்னர்
துறைக்கொரு அகராதியாகக் கலைச் சொற்களின் தொகுதிகள்
வெளியிடப்பட்டன.
தமிழக அரசின் ஆட்சி
மொழியாகத் தமிழ் ஏற்றுக்
கொள்ளப்பட்டதால், தமிழினை
நடைமுறையில்
பயன்படுத்துவதற்கு ஏற்ப
ஆட்சிச் சொல்லகராதி
வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகராதியின் நான்காம்
பதிப்பு
அண்மையில் வெளியானது. இந்நூலில் சுமார் 9000 சொற்கள்
உள்ளன.
5.2.1
சிறப்புச் சொல் துணையகராதிகள்
ஆட்சிச் சொல்லகராதியில் எல்லாத்
துறைகளுக்கும்
பொதுவாகப் பயன்படக் கூடிய சொற்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு துறையிலும் அத்துறையில் மட்டுமே
பெருமளவில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் மிகுதியாக
உள்ளன. ஒவ்வொரு துறையினரிடமிருந்தும் சிறப்புச் சொற்களைப்
பெற்று, அவற்றைத் தமிழ்ப்படுத்தி,
சிறப்புச் சொல்
துணையகராதி எனும் பெயரில் அகராதிகளைத்
தயாரித்து
வெளியிடும் பணியைத் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தொடர்ந்து
செய்து வருகின்றது. காவல்துறைச்
சிறப்புச் சொல்
துணையகராதி, பொது நூலகத் துறைச் சிறப்புச் சொல்
துணையகராதி, வேளாண்துறைச் சிறப்புச்
சொல்
துணையகராதி, ஆவணப் பதிவுத் துறைச் சிறப்புச் சொல்
துணையகராதி என்பன போன்ற
எழுபத்தெட்டுத்
துறைகளுக்குரிய 44 அகராதிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அகராதிகள் தமிழகத்தில் அரசு மொழியாகத் தமிழ்
பயன்படுவதற்கான அடித்தளத்தினை அமைத்துள்ளன.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1.
|
சொல்லாக்க
வளர்ச்சியில் எவை முக்கிய இடம்
பெறுகின்றன? |
|
2.
|
சொற்றொகுதியின்
தேவையை அறிந்து நிகண்டு
உருவாக்கப்பட்டது சரியா? |
|
3.
|
வீரமாமுனிவர்
வெளியிட்ட அகராதிகள் யாவை?
|
|
4.
|
சென்னை
மாகாண அரசு தயாரித்த கலைச்சொற்களின்
அகராதியைப் பற்றிக் கூறுக. |
|
5.
|
கலைச்சொல்லாக்கமும்
அகராதிகளும் பற்றி விளக்குக. |
|
|