தன் மதிப்பீடு : விடைகள் - I கலைச்சொல்லாக்கமும்
அகராதிகளும் பற்றி விளக்குக.
1875ஆம்
ஆண்டில் ஃபிஷ் கிரீன் என்ற அமெரிக்க
மருத்துவர், எஸ்.சுவாமிநாதன், சாப்மன் ஆகியோரின்
துணையுடன் மருத்துவம் தொடர்பான கலைச்சொற்களைத்
தொகுத்து நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.
சொல்லாக்கத்தின் விளைவாகத் தமிழில்
மொழி பெயர்க்கப்பட்ட கலைச் சொற்களைத் தொகுத்துத்
தனியாக அகராதியாக வெளியிடப்பட்டது இதுவே
முதன்முறை ஆகும்.
சென்னை மாகாண அரசு 1932இல் தயாரித்த
கலைச்
சொற்களின் அகராதி பெரிதும் சமஸ்கிருதச் சொற்களின்
ஒலிபெயர்ப்பாக இருந்தது. எனவே இவ்வகராதியினைத்
தமிழறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சென்னை
மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936இல் வெளியிட்ட கலைச்
சொல் தொகுதி, தரமானதாக அமைந்திருந்தது.
இத்தொகுதியைப் பின்னர் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
5)