5.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சொல்லாக்கமும் அகராதிகளும் பற்றிய அடிப்படையான தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட முக்கியமான தகவல்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

  • சொல்லாக்கமும் அகராதிகளும் பற்றிய கருத்துகள் உங்களுக்குள் பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.

  • சொல்லாக்கம் காரணமாக தயாரிக்கப்பட்ட சொல்லகராதிகளின் தன்மைகள், அவற்றின் செயற்பாடு மட்டுமன்றி ஆட்சிச் சொல் அகராதிகளின் உருவாக்கத்தில் நேர்ந்துள்ள சிக்கல்களும் இப்பாடத்தின் வழியாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

Board என்ற சொல் ஆட்சிச் சொல்லகராதியில் எவ்வாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
2.
தமிழ் மரபினுக்குப் பொருந்தாத சொல்லாட்சி யாது?
3.

இரு பணி நிலைகளை வகிக்கும் அலுவலரைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல் யாது?
4.
‘நடைப்பாதை’என்பது சரியா? விடை
5.
சொல்லாக்கமும் மொழி மாற்றமும் பற்றி விவரிக்க.