தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
5) |
சொல்லாக்கமும் மொழி மாற்றமும் பற்றி விவரிக்க. |
ஒரு மொழியின் வளர்ச்சியென்பது, மாறிவரும் சமுதாயப் பண்பாட்டு மாற்றங்களுக்கேற்ப, அம்மொழியும் மாற்றம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது ஆகும். சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், புரட்சி, சிறந்த இலக்கியப் படைப்புகள், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றன மொழியில் மாற்றத்தினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். ஆட்சிச் சொல்லகராதிகளில் காணப்படும் மொழிமாற்றங்கள் பின்வருமாறு :
(1) ஒலியமைப்பில் மாற்றம்
மரபு வழிப்பட்ட இலக்கண
நூற்கள்
வலியுறுத்தும் விதிகளுக்கு மாறாகப் புதிய
வகைப்பட்ட
சொல்லாக்கங்கள்
உருவாக்கப்படுவதனால்
மொழியானது
மாற்றமடைகின்றது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய
கருத்தியல்கள் போன்றவற்றைத் தமிழில்
சொல்லாக்கம் செய்யும்போது, மொழியமைப்பில்
மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கவியலாதது.
எனவே இத்தகைய மாற்றங்களை இனங்கண்டு
அவற்றுக்கேற்ப மொழியின் இலக்கண அமைப்பை
மாற்றி விரிவுபடுத்துதல் இன்று சொல்லாக்கத்தில்
ஈடுபடுவோரின் முக்கியமான பணி ஆகும். |