1.6 தொகுப்புரை


நண்பர்களே! இதுவரை ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடம் உங்களுக்குள் உருவாக்கியிருக்கும் பதிவுகளை நினைவு கொள்ளுங்கள்.

  • இப்பொழுது ஆட்சித் துறை மொழிபெயர்ப்புகள் பற்றிய சித்திரத்தின் அருமையை உணர்ந்திருப்பீர்கள்!

  • ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் சிறப்புகள், ஆட்சித் தமிழ் வரலாறு, ஆட்சித்தமிழ் நடைமுறைப்படுத்துதல், மொழிபெயர்ப்புகளின் சிறப்புக் கூறுகள்... போன்றன பற்றி இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழை ஆட்சி மொழியாக்கிட ஆட்சி மொழிக் குழு செய்திட்ட முதன்மைச் செயற்பாடுகள் யாவை?
2. தமிழக அரசு தமிழ்வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறையினை எப்பொழுது ஏற்படுத்தியது?
3. தேவநேயப் பாவணர் ஆட்சித் தமிழுக்கு ஆற்றிய பணி பற்றிக் குறிப்பு வரைக.
4. ஆட்சித்தமிழ்ச்சொற்கள் ஆக்கத்தில் பின்பற்றப்படும் சில நெறிமுறைகள் பற்றி விளக்குக