|  
  
     சமூகத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் துறைகளில்
 சட்டத்துறையும் ஒன்று. அதற்கான கலைச்சொற்களை
 உருவாக்குவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் கவனம்
 தேவைப்படுகின்றது. தற்சமயம் சட்ட மொழிபெயர்ப்புகளில்
 கலைச்சொற்கள் தரப்படுத்தப்படாமல், பல்வேறு வகைகளில்
 பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய போக்குச் சட்டத்
 தமிழ் பயன்பாட்டில் ஒழுங்கின்மையைத் தோற்றுவிக்கும்.
 எனவே சட்டத் தமிழுக்குரிய கலைச்சொற்களைத்
 தரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படல் 
 வேண்டும்.
 சட்டத்துறை மொழிபெயர்ப்புகளில் முதன்மையிடம் வகிக்கும்
 கலைச்சொல்லாக்கம் தரப்படுத்தலில் பின்பற்றப்பட வேண்டிய
 நெறிமுறைகள் பின்வருமாறு:  
 
 - 
 
பொருத்தம்   - 
 
எளிமை   - 
 
ஏற்றுக் கொள்ளுதல்   - 
 
தூய்மை   - 
 
சீர்மை   - 
 
பல்துறை அணுகுமுறையும் போக்கும்   
  
 • பொருத்தம் 
  
     சட்டத்தினைத் 
     தமிழில்     மொழிபெயர்க்கும்போது,
 ஆங்கிலத்திலுள்ள தொழில்நுட்பச் 
 சொற்களுக்குப்
 பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் பொருத்தமுடையனவா?
 என்று ஆராய்ந்திட வேண்டும். ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப்
 பல தமிழ்ச் சொற்கள் இருப்பினும், சூழலுக்கேற்ற, பொருத்தமான
 சொல்லைத் தரப்படுத்துதல் அவசியமானதாகும். Disposal என்ற ஆங்கிலச்சொல்லின் பொருள் தமிழில்
 ஒருங்கமைவு, வரிசைப்பாடு, செய்முறை, செயலாட்சி பொறுப்புத்
 தீர்வு,     கைப்பொறுப்பு நீக்கம் 
 என்று அகராதிகளில்
 காணப்படுகின்றது. எனினும் சட்ட நோக்கில் சில நேர்வுகளில்
 மேற்படி ஆங்கிலச் சொல்லுக்கு, தீர்த்துவை, அப்புறப்படுத்து,
 முடிவு செய், பராதீனம் (பிறருக்கு 
 உரிமையாக்குதல்)
 வெளிக்கொணர் என்ற பொருள்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.  
 • எளிமை  
     கலைச்சொல்லைத்     தரப்படுத்தும்போது 
 எளிமை
 அடிப்படையான அம்சமாகும். அதே நேரத்தில் எளிமை என்ற
 பெயரில் மலினப்படுத்தி விடக் கூடாது. வாசிப்பில் சொல்லின்
 நுட்பப் பொருளை விளக்குவதாகக் கலைச் சொல்லாக்கம்
 அமைந்திடல் வேண்டும்.  
     கோப்பு 
 (Files) களின் மீது ‘Confidential’ என்று காணப்படும்
 சொல்லுக்கு ரகசியம், மந்தணம்     ஆகிய 
 சொற்கள்
 பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 
     தற்சமயம்
 ‘மறைபொருள்’ என்ற சொல்லாக்கம் முன்மொழியப்பட்டுள்ளது.
 இச்சொல் எளிமையானதாகவும் நயமுடையதாகவும் உள்ளது.  
     Public 
 Functionary என்ற ஆங்கிலத்தொடருக்குப் பொதுப்
 பதவியர், பொதுப் பதவியலாளர் என்ற சொற்கள் 
 சட்டத்
 தமிழில் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்சமயம் 
 மாற்றம்
 ஏற்பட்டுள்ளது. ‘பொது வாழ்வினர்’ என்ற 
 சொல்லாக்கம்
 ஏற்புடையதாகிவிட்டது. இம் மொழிபெயர்ப்பு எளிமைக்குச்
 சிறந்த சான்று ஆகும்.  
 • 
 ஏற்றுக் கொள்ளுதல் 
     ஒரு 
 துறையினர் பின்பற்றும் மொழிபெயர்ப்பினை விடுத்துப்
 புதிய வகைப்பட்ட மொழி பெயர்ப்பினை இன்னொரு துறையினர்
 பயன்படுத்துவது வழக்கில் உள்ளது.  
     Pending 
 என்ற ஆங்கிலச் சொல் சட்டத்துறையினரால்
 ‘நடப்பிலிருக்கின்ற’ அல்லது ‘முடிவுறாதிருக்கின்ற’ என்று மொழி
 பெயரக்கப்படுகின்றது.     அதே 
     ஆங்கிலச்சொல்லை
 வருவாய்த்துறையினர் ‘நிலுவையில் இருக்கின்ற’ என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகின்றனர்.  
     Come 
 into force என்ற ஆங்கிலச் சட்ட வாசகம், சிலரால்
 ‘அமலுக்கு வருதல்’ எனவும், இன்னும் சிலரால் ‘செயலுக்கு
 வருதல்’ எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது. தற்சமயம் சட்டத்
 துறையினர் ‘நடைமுறைக்கு வருதல்’ என மொழிபெயர்த்துள்ளனர்.  
     எனவே 
 சட்டத் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சொற்கள்,
 மொழியில் ஏற்படும் மாற்றத்தினுக்கேற்ப, அவ்வப்போது மாறும்
 இயல்புடையன. ஒரு சொல் பெரு வழக்கினுக்கு வருவதற்கு
 முன்னர் எந்தப் பொருளில் வழங்கியதோ, அதற்கு நேர்மாறான
 பொருளிலும் இடம்பெறலாம். இந்நிலையில் சொற்களைத்
 தரப்படுத்தும்போது ஆழ்ந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.  
 • 
 தூய்மை 
     சட்டத் 
 தமிழைப் பொறுத்த வரையில் 
 ஆங்கிலத்தின்
 பயன்பாட்டிற்கு முன்னர் உருது, பாரசீகம், அரபுச் சொற்கள்
 அதிக அளவில் பயன்படுத்தப் பட்டன. எனவே தொடக்கக்காலத்
 தமிழ் மொழி பெயர்ப்புகளில் பிறமொழிச் சொற்கள் 
 அதிக
 அளவில் இடம் பெற்றன. பின்னர் நாளடைவில் தூய தமிழ்ச்
 சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே 
 மொழி
 என்பது மக்களின் வழக்கினுக்கேற்ப மாறும் இயல்புடையது. 
  
 (எ.கா) 
  |