6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படையான செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடம் உங்களுக்குள் ஏற்படுத்தியுள்ள பதிவுகளை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்த் திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றிய மேலோட்டமான வரலாற்றினை அறிந்துகொள்ள முடிந்தது.

திரைப்பட மொழி மாற்றம், திரைப்படச் சார மொழிபெயர்ப்புப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் திரைப்பட மொழிபெயர்ப்புகள் பெறுமிடம் தன்மைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. இந்தப் பாடம் உங்களின் தொடர்ந்த தேடலுக்கு ஆதாரமாக அமையும் எனலாம்.
 

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றி விளக்குக.
2. மொழி மாற்றத்தில் உதட்டசைவு, உடலியக்கம் பற்றி நும் கருத்தை எழுதுக.
3. திரைப்படச் சார மொழி பெயர்ப்பு - குறிப்பு வரைக.
4. திரைப்பட மொழி பெயர்ப்பின் சிறப்புகளை விவரிக்க.