1 |
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இந்திர விகாரங்கள் மூலம் நீங்கள் அறியும் செய்தி யாது? |
இந்திர விகாரங்கள் என்பது பௌத்த சமயக் கோயில்களைக் குறிக்கும். புகார் நகரில் இடம் பெற்றிருந்த பல்வேறு கோயில்கள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றன. பௌத்தர்களின் கோயில்களாகிய இந்திரவிகாரங்கள் பற்றிய விளக்கமும் இடம் பெறுகின்றன. சங்கம் மருவிய சமய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்பே தமிழகத்தில் பௌத்த சமயம் பெற்ற சிறப்பினை இது உணர்த்துகிறது. |
|