இந்தியாவில் பல்வேறு சமயங்களும் தங்கள் தங்கள் கோட்பாட்டின் படி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் சில இந்த நாட்டின் சமயங்கள். சில, பிற நாட்டிலிருந்து வந்த சமயங்கள்.

சமணமும் பௌத்தமும் வடக்கிலிருந்து வந்த சமயங்கள். சமணம் பௌத்தத்திற்கும் பல நூற்றாண்டுகள் முந்தையது. கௌதம புத்தரும் சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சமகாலத்தவர்.

இங்கு இருந்த வைதிக சமயமும் வடக்கிலிருந்து வந்த சமண, பௌத்த சமயங்களும் தங்கள் தங்கள் சமயக் கோட்பாடுகளைப் பரப்ப இலக்கியங்களைக் கருவியாக்கிக் கொண்டன. அதன் விளைவாகப் புதிய படைப்புகள் தோன்றின. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பௌத்தர்கள் சிறப்பாக வாழ்ந்ததற்குக் குறிப்புகள் கிடைக்கின்றன. எட்டுத்தொகை நூல்களிலும் பௌத்தச் சான்றோர் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்குக் கட்டப்பெற்றுள்ள பௌத்த விகாரங்கள், பள்ளிகள் ஆகியவையும் அவர்களின் இருப்பை எடுத்துரைக்கின்றன.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. சிலப்பதிகாரத்தில்  குறிப்பிடப்படும் இந்திர விகாரங்கள் மூலம் நீங்கள் அறியும் செய்தி யாது?
விடை
2. பௌத்த சமயக் கோட்பாடுகளை விரிவாகப் பேசும் காப்பியங்கள் யாவை?
விடை
3. தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்ற இரண்டு பௌத்த சமயச் சான்றோர்களைக் குறிப்பிடவும்.
விடை
4. பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்ற இரு தமிழகத்து நகரங்களைக் கூறவும்.
 
விடை
5. அறவோர் பள்ளி என்பது எதைக் குறிக்கிறது?
விடை