5.2 இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் |
இஸ்லாமிய மெய்ஞ்ஞானம், சூஃபி என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது. இச்சொல் சோபாஸ் (Sophas) என்ற கிரேக்கச் சொல்லடியாகத் தோன்றியது என்றும், அஹலுல் சுஃபா என்ற அறபுச் சொல்லடியாகத் தோன்றியது என்றும் சூஃப் என்ற பாரசீகச் சொல்லடியாகத் தோன்றியது என்றும் ஆய்வாளர்கள் பலரும் பலவாறாகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் சூஃபி என்ற சொல், இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்களைக் குறிக்கும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. சூஃபி மெய்ஞ்ஞான நெறி அறபு நாட்டில் தோன்றிப் பாரசீக நாட்டில் நிலை பெற்று வளர்ச்சியுற்று, உலகளாவிய நிலையில் வெள்ளமெனப் பரவியது. இந்நெறி மனுக்குல முதல்வரான ஆதம் நபியிலிருந்து தொடங்கியது என்பதற்கான சான்றுகள் இஸ்லாமியத் திருமறையாகிய அல் குர்ஆனில் காணக் கிடைக்கின்றன (அல்குர் ஆன் 5 : 28,29) அல்குர் ஆன் திருவசனங்களை நடைமுறைப்படுத்தி, அதன் வழியில் நடந்து காட்டிய நபிகள் பெருமானாரே சூஃபி மெய்ஞ்ஞான நெறியின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றார். இதனை இவர் மிகுராசுப் பயணத்தில் கைவரப் பெறறார். சூஃபி மெய்ஞ்ஞான நெறிக்கு அடிப்படையானது தஸவ்வுஃப் கோட்பாடாகும். தஸவ்வுஃப் என்பதற்கு ‘நோக்கு’ என்று பொருள் கொள்ளலாம். இஸ்லாமிய மார்க்கச் சட்டங்கள் பிக்ஹூ எனப்படும். இது மனிதனுடைய வெளிப்படையான செயலுடன் தொடர்புடையது. பிக்ஹூ சட்டங்கள், இஸ்லாமியர்க்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை, அவர்கள் எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்று நோக்குகின்றது. கட்டளைகள் இடப்பட்டவாறே நிறைவேற்றி இருந்தால் அவர்களுடைய மனநிலை எத்தகையது என்று பிக்ஹூக்குக் கவலை இல்லை. மன நிலை எப்படி இருக்கிறது என்று எது நோக்குகின்றதோ அதற்குப் பெயர்தான் தஸவ்வுஃப் எனப்படும். அல்குர் ஆனில் இதற்குத் தஸ்கியா அல்லது ஹிக்மத் என்றும், அல் ஹதீசில் இஹ்சான் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. தஸவ்வுஃப் கோட்பாடு ஷரீஅத்தின் அடித்தளத்தில் அமைந்ததாகும். இஸ்லாமிய மார்க்கம் வகுத்துரைக்கும் கட்டாயக் கடமைகள் ஐந்தினில் அமைந்த மாடம் தஸவ்வுஃப் எனலாம். இம்மாடத்தில் கூடுவோருக்கு ஒரே நோக்கம் இறையன்பு என்ற ஒன்றை எய்தப் பெறுதலேயாம். இறையன்பைப் பெற இறைவனைத் தேடல், இறைவனுக்கு இணங்கல் என்னும் இருகுறிக்கோளுடன் இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் முயல்கின்றனர். இத்தகைய குறிக்கோளுடையவர்கள் செல்லும் பாதை சுலூக் என்றும், சுலூக்கில் நிற்பவர்கள் சாலிகு என்றும் சுட்டப்படுகின்றனர். இஸ்லாமிய மெய்ஞ்ஞானி மேற்கொள்ளும் ஆத்மீகப் பயணத்தில் முதற்கண் வேண்டுவது ஆத்ம சுத்தியாகும். ஆத்மசுத்தி என்பது ‘தான்’ என்னும் அகங்காரம் அழித்து, காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பாழ் கடந்து அனைவரிடமும் பணிவு மேற்கொள்வதாகும். இது ஒரு நிலை, அடுத்த நிலை இறைவனுக்கு முற்றிலும் சரணடைந்து அவனிடமே பாதுகாவல் நாடி (தவக்குல்) வணங்குதல், வரும் இன்ப துன்பங்கள் யாவும் அவனிடமிருந்தே வருகின்றன எனச் சகிப்புத் தன்மையை மேற்கொள்ளல், தனித்திருத்தல், விழித்திருத்தல், பசித்திருத்தல், நோன்பிருத்தல், இறைத்தியானம், மறைத்தியானம் இன்ன பிறவற்றில் வழுவாமல் செயலாற்றல் மூன்றாம் நிலை, இம்மூன்று நிலைகளிலும் நின்ற மெய்ஞ்ஞானியர்களே சித்தி பெறுவர். |
5.2.2 பெறும் பேறுகள் | ||||||||||||
இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் மேற்கொள்ளும் ஆத்மப் பயணம் நாசூத்து, மலக்கூத்து, ஜபறூத்து, லாஹூத்து என்னும் நான்கு பேறுகளையும் அளித்து ஈற்றில் லாஹூத்து நிலைக்கு உயர்த்தும் என்பர். நாசூத்து என்பது இந்த ஜடலோகத்தைக் குறிக்கும். மலக்கூத்து என்பது வானவர் உலகத்தையும், ஜபறூத்து என்பது சக்திலோகத்தையும், லாஹூத்து என்பது தெய்வ லோகத்தையும் குறிக்கும். ஞானப் பயணம் அதன் முதிர்ச்சியால் இந்த ஜட லோகத்தை விட்டு வானவர் உலகத்தில் முதலில் புகச் செய்யும். பின் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் செயற்பண்பினை அடையச்செய்து சக்தி லோகத்தைப் பெறச் செய்யும்; அதற்குப் பின்னும் மேற்கொள்ளும் செப தப வாழ்வு உருவமற்று, காணல், கேட்டல், பேசல் முதலிய பண்பினை எய்தச்செய்து, தெய்வ லோகத்தை எட்டச் செய்யும். அதற்குமேல் இறைப்பண்பில் அந்த ஆத்ம ஞானி தோய்ந்து லாஹூத்துப் பேறு பெறுகிறான்.
இந்த ஜடலோகம் வாசியில் அமைந்தது. (வாசி = பிராணவாயு) சாதாரணப் பாமரன் முதல் பரமன் அருள் வேண்டித் தவம் செய்யும் ஞானியர்கள் வரை வேண்டுவது வாசி நிலையேயாகும். இதனில் ஞானியர்கள் கைக்கொள்ளும் வாசிநிலை அவர்களை உயர்த்தி மலக்கூத்து என்னும் வானவர் உலகில் சேர்க்கும். அவ்வாறு வானவர் உலகில் சேர்ந்த ஞானியர்கள் மேலும் முயன்று வாசி நிலையால் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் செயற்பண்பினைப் பெற்று ஜபறூத் என்னும் சக்தி உலகில் புகுவர். பின்னும் மேற்கொள்ளும் வாசி, தவம் ஆகியவற்றால் காணல், கேட்டல், பேசல் ஆகிய லாஹூத்து என்னும் தெய்வ நிலைக்கு உயர்த்தும் என்பதாகும். நாசூத்து, லாஹூத்து, மலக்கூத்து, ஜபறூத்து என்னும் நான்கு உலகும் வாசி நிலை என்ற ஒன்றின் அடிப்படையில் அமைந்தன என்பதனை, தமிழ் மெய்ஞ்ஞான இலக்கியங்கள் புனைந்திருப்பதும் இங்குச் சுட்டத் தக்கது. பூவாற்றில் அடக்கமாகி இருக்கும் பெரிய நூகு லெப்பை ஆலிம் புலவர் அருளிச் செய்த வேதபுராணம்.
என வாசி நிலையிலும் கண் பார்வையிலும் இந்நான்கு தலமும் அமைந்திருப்பதாகக் கூறுவதும் நோக்கத் தக்கது. காயல்பட்டினத்து ஞானி முகம்மது முகைதீன் ஆலிம் அருளிய ஷாதுலி நாயகம் என்னும் மெய்ஞ்ஞான இலக்கியம் இதனை,
(பிரிசமுடன் = பிரியமுடன்) எனக் குறிப்பிடுகிறார்.
சமய சம்பந்தமான நெறிமுறைகளைக் கற்பிக்கும் இடம் ஞானபீடம் எனப்படும். கி.பி 12ஆம் நூற்றாண்டில் பாரசீக நாட்டிலும், அறபு நாட்டிலும் அதன் அண்டை அயல் நாடுகளிலும் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியை முறையாகப் பயிற்றுவிக்க ஞான பீடங்கள் பல தோன்றின. இறைத்தியானம் (திக்ர்), பரஞ்சாட்டல்(தவக்குல்), பொறுமை(சபர்), நன்றி செலுத்துதல் (ஷுக்கூர்) ஆகிய இன்னபிற அடிப்படை நெறிகளை இந்த ஞான பீடங்கள் பயிற்றுவித்தன. இவற்றில் மாணவர்கள் நிரந்தரமாகத் தங்கி உணவு முதலான வசதிகளுடன் பயிற்சி பெற்றனர். இத்தகைய ஞான பீடங்கள் கான்கா என்று அழைக்கப்பட்டன. கான்கா என்பதற்குத் தியானக் கூடம் என்று பொருள் கொள்ளலாம். சில இடங்களில் இத்தகைய கான்காக்கள் ஜாவியா (Zaviya) என்றும் தக்கியா (Dhakhiya) என்றும் ரிபாத் (Ribath) என்றும் வழங்கப்பட்டன. ஞானபீடம் கண்ட ஞானியர்கள் தத்தம் அனுபவ ஆற்றலுக்கு ஏற்ப மெய்ஞ்ஞான நெறிமுறைகளை வகுத்தளித்தனர். அம்முறைகள் யாவும் ‘தான்’ என்பதிலிருந்து பிரிந்து இறைவனை எய்தப் பெறும் மார்க்கமாக இருந்தன. ஒரு ஞானி வகுத்தளித்த அணுகுமுறை இன்னொரு அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அவைகள் யாவும் தனித்தனித் தரீக்காக் (Form or Order) களாக இருக்கின்றன. ஆனால் எல்லா அணுகு முறைகளும் பரவச நிலை (ஜஸ்பா - Ecstacy) பெறும் வகையிலும், ஞானஒளி (தஜல்லி - Illumination of Heart), தெய்வ வெளிப்பாடு (இல்ஹாம் Intuition) தோற்றுவிக்கும் வகையிலும் அமைந்து விளங்குகின்றன. இவ்வகையில் அமைந்த தரீக்காக்கள் யாவும், ஞானபீடம் கண்ட ஞானியர்களின் பெயரைப் பெற்றமைகின்றன. சான்றாக முகியித்தீன் ஆண்டகை எனத் தமிழக மக்களால் அழைக்கப்படும் அப்துல்காதர் ஜீலானி அருளிய நெறி காதிரியாத் தரீக்கா என்றும், அபுல்ஹசன் ஷாதுலி இமாம் வகுத்தநெறி ஷாதுலியாத் தரீக்கா என்றும், அபு இஸ்ஹாக் சிஸ்தி தந்தநெறி சிஸ்தியாத் தரீக்கா என்றும் வழங்கப்படுகின்றன. இவ்வாறே அனைத்துத் தரீக்காக்களும் அவற்றை அருளிய ஞானியர்களின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. உலகளாவிய நிலையில் பதினான்கு தரீக்காக்கள் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் காதிரியா, ஷாதுலியா, சிஸ்தியா ஆகிய மூன்று தரீக்காக்களே தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று விளங்குகின்றன. இம்மூன்று தரீக்காக்களுடன், நக்ஷபந்தி, சுஹ்ராவர்தி, ஷத்தாரி ஆகிய மூன்று தரீக்காக்களுமாக ஆறு தரீக்காக்கள் வட இந்தியாவில் நிலை பெற்றிருக்கின்றன.
இந்தியத்
திருநாட்டில்
கால்கொண்ட முதல் இஸ்லாமிய மெய்ஞ்ஞான பீடம் சிஸ்தியா நெறி
(தரீக்கா)
ஆகும். இது சிரியா நாட்டவரான அபு இல்ஹாக் சிஸ்தி என்னும் மெய்ஞ்ஞானியாரால்
நிறுவப்பட்டது.
பாரசீக நாட்டில் உள்ள
குரசான் மாநிலத்தில் உள்ள சீஸ்தான் என்னும் ஊரினரான
காஜா
முஐனுதீன் சிஸ்தி (கி.பி 1116-1229) என்னும்
மெய்ஞ்ஞானி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
அஜ்மீரில் சிஸ்தியா ஞான பீடத்தை நிறுவினார். வாழ்வின்
இறுதிவரை அவர் அங்கு
வாழ்ந்து, சாதி
மதச் சார்பற்ற முறையில் சிஸ்தியா மெய்ஞ்ஞான
நெறியைப் போதித்தார். இவருடைய காலத்திலும்
இவருக்குப் பின்வந்த நிஜாமுதீன்
அவுலியா காலத்திலும் இந்தோ
- இஸ்லாமியக்
கலாச்சாரங்கள் சங்கமம் கொண்டன.
இசை,
இஸ்லாமியர் வாழ்வுடன் கலந்தது. கொட்டடித்தல், தேர்த்திருவிழா போன்ற
இந்துத்துவச் சடங்குகள் இஸ்லாமியத்தில்
ஏறின. சமூக சேவை மெய்ஞ்ஞான நெறியின் ஓர்
அங்கமாகக் கொள்ளப்பட்டது.
இந்தியக் கலாச்சாரப் பண்பாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை நிலவியது.
மன்பதை நலனுக்கு
இறைவனை யார்
நேசிக்கிறார்களோ அவர்களையும் இறைவன்
தனக்கு நெருக்கமுள்ளவராகக் கொள்கிறான்
என்றார்
நிஜாமுதீன் அவுலியா. யாவருக்கும் சாந்தி என்ற
தாரக மந்திரத்தையும் அவர்
போதித்தார். எல்லா
சுஹ்ராவர்தியா என்னும் ஞானபீடத்தை நிறுவியவர் அப்துல் காதர் சுஹ்ராவர்தி (மரணம் 1167), உமர் சுஹ்ராவர்தி என்னும் இரு சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் பிறந்தவர்கள், இந்த இயக்கம், பிறந்த மண்ணில் செல்வாக்குப் பெறவில்லை. இந்தியாவில் ஆப்கானிஸ்தானத்தில் நன்கு வேரூன்றியது.
கி.பி 1415இல் அப்துல்லா ஷத்தார் என்னும் ஞானியரால் ஷத்தாரியா நெறி ஆரம்பிக்கப்பட்டது. ஷத்தாரியா அமைப்புத் தொடங்கப்பட்ட போது சிஸ்தி, சுஹ்ராவர்தி அமைப்புகளின் செல்வாக்குக் குறைந்தது. ஷத்தாரியா அமைப்பினால் இந்திய இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி மாறுபட்ட கருத்தின்பால் நழுவத்தொடங்கியது. இந்து மக்களிடையே வேற்றுமையைக் களைந்து ஒற்றுமைப்படுத்தத் துணை நிற்கும் யோகம் போன்ற நியமங்களை ஷத்தாரியா அமைப்புத் தனதாக்கிக் கொண்டது. சுருங்கக் கூறினால் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தத்துவ இயலை வேதாந்தச் சாயலோடு ஒப்புமைப்படுத்தியது.
நக்ஷபந்தித் தரீக்காவை நிறுவியவர் நக்ஷபந்த் முஹம்மது (கி.பி.1317-1389) என்னும் மெய்ஞ்ஞானி ஆவார். இவருடைய தந்தையார் முகம்மது பஹாவுதீன்; பாரசீக நாட்டிலுள்ள புகாரா என்னும் நகரத்திற்கு அருகில் உள்ள ஷந்தவான் என்னும் ஊரினர் ஆவார். நக்ஷ் என்பதற்கு ஓவியம் என்று பொருள். இவ்வியக்கம் மெய்ஞ்ஞானத் தத்துவத்தை ஓவியமாகப் புனைந்து அருளியது. நக்ஷபந்தி இயக்கம் சமூகத் தொண்டை ஓர் அங்கமாகப் பின்பற்றியது. ஆனால் காலம் செல்லச் செல்ல இந்நிலை மாறியது. இஸ்லாமியத்திற்குப் புறம்பான கலாச்சாரச் சங்கமத்தைக் கொண்டது. சமய நல்லிணக்கமே குறிக்கோளாகக் கொண்டது.
ஷாதுலியா தரீக்காவை நிறுவியவர் அபுமதியான் என்னும் மெய்ஞ்ஞானியர் ஆவார். உலகளாவிய நிலையில் பரப்பியவர் ஆப்பிரிக்காவில் உள்ள கெமாரா என்னும் ஊரினரான அபுல் ஹசன் அலி ஷாதலிஇமாம் (கி.பி. 1116-1259) ஆவார். ஷரீஅத்தை மிகக்கடுமையாக பேணித் தரீக்கத்தை எய்துவதையே இவர் போதித்தார்.
ஷரீஅத் என்னும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு, தரீக்கத் இந்நாட்டில் கலாச்சாரச் சங்கமங்களுடன் பேணப்பட்டு வரும் நிலையில், கி.பி 1481இல் காதிரியா தரீக்கா வட இந்தியாவிற்கு வருகை தந்தது. இக்காலத்தில் வடஇந்தியாவில் சிக்கந்தர் லோடியின் ஆட்சி அமைந்திருந்தது. முகியித்தீன் ஆண்டகையின் தலைமகன் வழிப் பெயரர் முகம்மது கவுது ஜீலானி இங்கு இத்தரீக்காவிற்கு வித்திட்டார். அரசரும் அமைச்சரும் மற்றும் அரசியல் ஆயத்தார் பலரும் காதிரியாத் தரீக்காவை ஏற்றனர். முகலாய மன்னர் ஷாஜஹான் காலத்தில் இந்தியாவிற்கு வந்த அபுல் அலி காதிரியும் மியாமீர் என்ற ஆத்ம ஞானியும் பஞ்சாபில் காதிரியாத் தரீக்காவைப் பரப்பினர். அரசரின் பேராதரவு இருந்ததால் கான்காக்கள் பல நிறுவப்பட்டன. வடஇந்தியாவில் காதிரியாத் தரீக்காப் பரவிய அதே வேகத்தில் தமிழகத்திலும் பரவியது எனலாம். முகியித்தீன் ஆண்டகையின் வழித்தோன்றல் ஷைகு அஹமது ஜலாலுதீன் காயல்பட்டினத்திற்கு வந்து சுலைமான் காஹிரி, கோட்டைப்பட்டினம் ஷெய்க் முகம்மது ஷா; திருமங்கலம் லானா அபுபக்கர் ஒலியுல்லா முதலானோருக்குக் காதிரியாத் தரீக்காவின் ஞான தீட்சை வழங்கினார். சுலைமான் காஹிரியின் மகன் சதக்கத்துல்லா அப்பா அன்றைய நிலையில் பார்சி மொழிவல்ல மெய்ஞ்ஞானக் கடலாகத் திகழ்ந்தார். இவருடைய சீடர்களான மஹ்முது தீபியும் வேதபுராணம் அருளிய பூவாற்று பெரியநூகுலெப்பையும் தமிழகத்தில் காதிரியாத் தரீக்காவைப் பரப்பிய நல்லார் ஆவார். சதக்கத்துல்லா அப்பாவின் மகன் உமர் ஒலியும், காயல்பட்டினம் தைக்காசாகிபும், கள்ளிக் கோட்டை, கண்ணணூர், தலைச்சேரி, கோட்டாறு, திருவனந்தபுரம் முதலான பகுதிகளில் காதிரியாத் தரீக்காவைப் பரப்பினர். தமிழகத்து மெய்ஞ்ஞானியர் பலரும் முகியித்தீன் ஆண்டகையைத் தம் ஆன்மீகக் குருவாகக் கொண்டு தத்தம் மெய்ஞ்ஞான இலக்கியங்களில் குருவணக்கம் அருளியுள்ளனர். சான்றாக,
என்று குணங்குடி மஸ்தான் சாகிபு அருளிய திருப்பாடற்றிரட்டு நூலில் (செய்யுள் -1) கடவுள் வாழ்த்துப்பா அமைந்திருப்பதைக் காட்டலாம். |
|