|
இந்தப்
பாடத்தைப் படித்து முடிக்கும்போது இதழ்களின்
சிறப்பை அறியலாம். இதழ்களின் நோக்கத்தையும் விளக்கமாக
அறியலாம்.
-
இதழ்கள் மக்களாட்சியின்
காவல் தேவதையாக விளங்கி,
செய்திகளைப் பரப்பியும், விளக்கியும், விமர்சித்தும்
கருத்துகளை உருவாக்குவதை அறிந்து கொள்ளலாம்.
-
அரசியலமைப்பில்
இன்றியமையா இடம் பெறும் இதழ்கள்
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும்,
எதிர்க்கட்சியாகச் செயலாற்றியும், வளர்ச்சியில் பங்கு பெற்றுச்
சிறப்புறுவதை அறியலாம்.
-
இதழ்களின் பொதுவான
நோக்கங்களான தெரிவித்தல்,
நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம்,
சேவை
முதலியவற்றை அறியலாம்.
-
இதழ்களின் சிறப்பு
நோக்கங்களை அறியலாம்.
|