3.6 தொகுப்புரை

இலக்கியங்களில் கையாளப்படுகின்ற மொழிநடைக்கும் இதழ்களில் கையாளப்படுகின்ற மொழிநடைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இதழ்களின் மொழிநடை குறைந்த அளவு கல்வியறிவுடையவர்களுக்கும் புரியும்படியாக இருத்தல் வேண்டும். முற்காலத்தில் தமிழுடன் வடமொழி கலந்த மொழிநடையை இதழ்களில் கையாண்டனர். மொழிநடை அமைப்பில் எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப் பிழை மற்றும் பிற இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடாது.

பத்திரிகைகளில் செய்திகளை வெளியிடும் பொழுது தேவையான இடங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வெளியிட வேண்டும். இப்படிப்பட்ட திருத்தங்கள் வாசகர்கள் செய்திகளை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும். தொடர்ந்து வாசகர்கள் அந்தப் பத்திரிகையை வாங்குவதற்கும் இது வழிவகுக்கும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

இதழ்களில் நிறுத்தக் குறிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?

விடை
2.

இருபொருள்படும் சொற்களை இதழ்களில் பயன்படுத்தலாமா?

விடை
3.

இதழியல் மொழிநடையில் செயப்பாட்டுவினையைப் பயன்படுத்தலாமா?

விடை
4.

மொழிநடையில் திருத்தங்கள் ஏன் செய்யவேண்டும்?

விடை
5.

செய்தி நிறுத்தம் என்றால் என்ன?

விடை