2. | மூவேந்தர்கள் யாவர்? அவர்கள் நாட்டுத் தலைநகரங்கள்
யாவை? |
சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று
மரபு அரசர்களே மூவேந்தர் என அழைக்கப் பெற்றனர். சேரர் தலைநகரமாக வஞ்சி எனும் கருவூரும், சோழர் தலைநகரமாகப் புகார் எனும் காவிரிப்பூம்பட்டினமும், உறையூரும், பாண்டியர் தலைநகரமாக மதுரையும் விளங்கின. |
|
முன் |