சதாவதானி
செய்கு தம்பிப் பாவலர், எல்லாச் சமயங்களுக்கும்
பொதுவாகக் கடவுளைச் சுட்டும்
ஒரு தொடர்
சொல்லுங்கள்
என்று கேட்கப்பட்டபோது,
அவர் சிரமாறுடையான்
என்று
பாடினார். இதைச் சிரம் ஆறு
உடையான் எனவும்
சிரம்மாறு
உடையான் எனவும் பிரிக்கலாம்.
சிரம் = தலை, தலைமை என்னும் பொருள்கள்;
ஆறு = நதி, எண்(6) என்னும் பொருள்கள்;
ஆறு = நெறி;
சிரமாறு = சிரம்மாறு (மாறுதல்);
சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கை ஆற்றை உடையவன்
(சிவன்)
தலை ஆறு உடையான் (முருகன்)
தலை மாறி இருப்பவன் (யானைமுகன்)
தலைமையான நெறிகளை உடையவன் (அல்லா, இயேசு, புத்தர்)
இவ்வாறு அனைத்து மதக் கடவுளரையும்
இரண்டு சொற்களுள்
சிலேடையாக அமைத்துக்காட்டினார்
புலவர்.
|