தன் மதிப்பீடு : வினாக்கள் - I
4. நீ இந்துவா? முஸ்லிமா? என்ற அப்துல் ரகுமானின்
கேள்விக்குக் கடவுள் தந்த பதில் என்ன?

தொலைபேசி உரையாடலில் கவிஞரிடம் ‘சிக்கிக்’ கொண்ட
இறைவனிடம் கவிஞர் இறுதியாகக் கேட்ட மேற்குறிப்பிட்ட
கேள்விக்கு இறைவன் சரியான பதில் அளிக்கவில்லை. ‘ராங்
நம்பர்’ என்ற பதிலோடு இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
கடவுளை மதவேலிக்குள் அடைக்க முயலும் அறிவின்மையை
உணர்த்துவதாக உள்ளது கடவுளின் பதில்.

முன்