பண்டைக் காலத்தில், மக்களுக்கு வைக்கும் பெயர்களைத் தம்மோடு வாழும் விலங்கு, தோட்டம் போன்றவற்றிற்கும் இட்டு வழங்கினர். அதனால் ஒரே பெயர் இருதிணைகளிலும் கலந்து வழங்கிற்று. அதனை “விரவுப் பெயர்” என்று வழங்கினர். மேலும் சூரியன் உதித்தான், சூரியன் உதித்தது, சந்திரன் உதித்தான், சந்திரன் உதித்தது என ஒரு பொருளையே இருதிணையிலும் குறிப்பிடுவதும் உண்டு. உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான இப்பெயர்கள் இருதிணைப் பொதுப் பெயர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தம்மோடு வரும் பெயராலும் வினையாலும் பால்களைச் சுட்டி நிற்கும். முதற் பெயர்கள் நான்கும் சினைப் பெயர்கள் நான்கும், சினைமுதற் பெயர்கள் நான்கும், முறைப் பெயர்கள் இரண்டும், தன்மைப் பெயர் நான்கும், முன்னிலைப் பெயர்கள் ஐந்தும், எல்லாம், தான், தாம் என்பனவும், இவை போன்ற பிறவும் இருதிணைக்கும் உரிய பொதுப் பெயர்களாம்.
ஆக இருதிணைப் பொதுப் பெயர்கள் மொத்தம் இருபத்து ஆறு ஆகும்.
4.2.1 ஆண்மை முதற்பெயர் முதற்பெயர் என்பது முழுமையான ஒரு பொருளுக்கு வழங்கப்பட்டு வரும் பெயர் ஆகும். இது ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்கு வகைப்படும். (1) ஆண்மை முதற்பெயர்
சாத்தன் என்னும் ஆண்மை முதற்பெயர் இருதிணை ஆண்பாலுக்கும் பொது ஆயிற்று. சாத்தன் என்ற பெயர் வீட்டில் உள்ள மகனுக்கும், அதே வீட்டில் வளருகின்ற ஒரு காளை மாட்டுக்கும் பெயராக அமைந்துள்ளது. எனவே சாத்தன் என்பது இரு திணை ஆண்பாலுக்கும் பொதுவாக வந்துள்ளது. (2) பெண்மை முதற்பெயர்
சாத்தி என்னும் பெண்மை முதற்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று. மேலே கூறியது போலவே, மகளுக்கும், வீட்டில் வளருகின்ற பசுமாட்டிற்கும் சாத்தி என்ற பெயர் பொதுவாக வந்துள்ளது. (3) ஒருமை முதற்பெயர்
கோதை என்ற ஒருமை முதற்பெயர், இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொதுவாகி வந்துள்ளது. (4) பன்மை முதற்பெயர்
கோதைகள் என்னும் பன்மை முதற்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று. 4.2.2 சினைப்பெயர் உறுப்பின் காரணமாக வைக்கப்பட்டு வழங்கி வரும் பெயர் சினைப்பெயர் ஆகும். இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை,பன்மை என நான்காகும். (1) ஆண்மைச் சினைப் பெயர்
முடவன் என்ற ஆண்மைச் சினைப்பெயர் இருதிணை, ஆண்பாலுக்கும் பொதுவாயிற்று. (2) பெண்மைச் சினைப்பெயர்
முடத்தி என்னும் பெண்மைச் சினைப்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று. (3) ஒருமைச் சினைப்பெயர்
செவியிலி என்ற ஒருமைச் சினைப்பெயர் இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று.
செவியிலிகள் என்ற பன்மைச் சினைப்பெயர் இருதிணையிலும் பன்மைக்குப் பொது ஆயிற்று. 4.2.3 சினைமுதற்பெயர் உறுப்பையும் உறுப்பை உடைய முதற்பொருளையும் கொண்டு வழங்கும் பெயர் சினை முதற்பெயர் ஆகும். இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்காகும். (1) ஆண்மைச்சினைமுதற்பெயர்
இப்பெயர் இருதிணையிலும் ஆண்பாலுக்குப் பொதுவாக வந்தது. (2) பெண்மைச்சினைமுதற்பெயர்
இப்பெயர் இருதிணையிலும் பெண்பாலுக்குப் பொதுவாக வந்தது. (3) ஒருமைச் சினைமுதற்பெயர்
இப்பெயர் இருதிணையிலும் ஆண், பெண், ஒன்று என மூன்று ஒருமைக்கும் பொதுவாக வந்தது. (4) பன்மைச் சினைமுதற்பெயர்
இப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொதுவாக வந்தது. 4.2.4 முறைப் பெயர் 2 (தந்தை-தாய்) உறவு பற்றி வரும் பெயர்கள் முறைப்பெயர் எனப்படும்.
4.2.5 தன்மைப் பெயர் (4) தன்மையில் வரும் யான், நான், யாம், நாம் ஆகிய நான்கும் இருதிணைக்கும் பொதுவாகும்.
நான், நாம் என்பனவும் நான் நம்பி, நான் நங்கை, நான் பறவை, நாம் மக்கள், நாம் பறவைகள் என வரும். 4.2.6 முன்னிலைப் பெயர் (5)
எல்லீர், நீயிர், நீவிர் என்பனவும் இவ்வாறே இருதிணைக்கும் பொதுவாக வரும். 4.2.7 படர்க்கைப் பெயர் (2)
4.2.8 மூவிடப் பொதுப் பெயர் (1)
4.2.9 பொதுப்பெயர்கள் வினைச்சொல் கொண்டு பால் உணர்த்தும் பொதுப்பெயர்கள் தம்மோடு சேர்ந்து வரும் பெயர் கொண்டும் வினைகொண்டும் இன்னபால் என அறியப்படும் என முன்னர்க் கண்டோம். இதுவரை நாம் கண்ட எடுத்துக் காட்டுகளில் பெயர்ச்சொல் கொண்டு பால் தெளிவுபடுவதைக் கண்டோம். இனி, தொடர்ந்து வரும் வினைச்சொல் மூலம் பொதுப்பெயர் பால் உணர்த்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
|