2,6 தொகுப்புரை

பண்டைத் தமிழருக்கு இறைநம்பிக்கை இருந்திருக்கிறது.
சமயங்களுக்கான அடிப்படைத் தத்துவங்களின் வெளிப்பாடாகப்
(Off shoot) பிற்காலத்தில ‘ஒன்றே குலம்’, ‘ஒருவனே தேவன்’
என்ற நிலைக்கு     வளர்ந்துள்ளது. மேலும், ‘அன்பே
சிவம்’ ‘அருள்பெருஞ்சோதி’ போன்ற தத்துவங்கள் மலர்ந்தன.
இவற்றின் வளர்ந்த நிலை, சமயப்பொறை பற்றிய தத்துவங்களை
உருவாக்கின.

இத்தகைய தத்துவங்களின் முழுமையை வள்ளுவரின் இறைமை
பற்றிய கருத்துகளில் காண இயலும்.

சிறந்த     ஆட்சி     வழங்கிய     மன்னன், இறையாகப்
போற்றப்பட்டுள்ளான்.     பெண்களின் கற்பின்     தன்மை
இயற்கையைக்கூட கட்டுப்படுத்தக் கூடியது. முயற்சியினால்
ஊழைஇயற்கையைக்கூட கட்டுப்படுத்தக் கூடியது. முயற்சியினால்
ஊழையும் வெல்லமுடியும். தமிழ் மக்கள் அறத்தினை இறைவனாக
உருவகப்படுத்தியுள்ளனர். விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன்,
எழுத்துகளின் தொடக்கமாகிய அகரமாயிருப்பான். இத்தகைய
கருத்துகளையும் வள்ளுவர் கூறியுள்ளார்.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II


1.


இறைவன் எத்தகையவன் என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்?

2.

நம்மை முழுமையாக எப்பொழுது ஒப்புவிப்போம்?

3.

எது நிலையான இன்பம்?

4.

ஒருவன் செய்யும் தீயச் செயலுக்கு எது தண்டனை
வழங்கும்?

5.

அறக்கடவுள் யாருக்குக் கேடு விளைவிக்க
எண்ணும்?