4) | ஆற்றுப்படைப் பாட்டு எவ்வாறு அமைகின்றது? |
புறப்பொருள் பற்றிய பாடல்களில் வளம்மிக்க வாழ்வைப் பெற்ற கலைஞர்கள் வறுமையால் வாடும் கலைஞர்க்கு வழிகாட்டி, வள்ளல் ஒருவனிடம் அனுப்புவதாகப் பாடப்படும் பாட்டு ஆற்றுப்படை எனப்படும். அது அந்தக் கலைஞர்களின் பெயரால் பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, புலவராற்றுப்படை என வழங்கும். |