3) |
வெட்சி, கரந்தை, பாடாண் - ஆகிய புறத்திணைகள் குறித்துச் சுருக்கக் குறிப்பெழுதுக. |
போர்த் தொடக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களுள் ஒன்று பகைவரின் ஆநிரைகளைக் கவர்தலாகும். அதற்கு அடையாளமாகப் போர்தொடுக்க முனைவோர் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வர். அதுவே வெட்சித் திணை எனப் பெயர் பெறும். ஆநிரை கவர்ந்த வெட்சி மறவரை எதிர்கொண்டு இழந்த தம் ஆநிரைகளை மீட்டுவருவதற்காகக் கரந்தை மறவர் அடையாளப் பூவாகக் கரந்தை மலரைச் சூடிச் செல்வர். அதுவே கரந்தைத் திணை எனப் பெயர் பெறும். புகழுக்குரியோரைப் பாடுதல் பாடாண் திணை. |