|
1.7 தொகுப்புரை
மாணவ நண்பர்களே!
இதுவரை அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்துகொண்டீர்கள். என்னென்ன
செய்திகள் என்பதை மீண்டும்
ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்!
-
இலக்கிய வகைமைகள் பற்றிய பொதுச் செய்திகளை
அறிந்திருப்பீர்கள்.
-
தமிழில் இலக்கிய வகைமை பற்றிய சிந்தனை
தொல்காப்பியர் காலம் முதலே வளர்ந்து வந்துள்ள
நிலையைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள்.
-
தொல்காப்பியர் சுட்டியுள்ள திணை, துறைகள் பற்றிய
அடிக்கருத்துகள், காலப்போக்கில் தனித்தனி இலக்கிய
வகைமைகளாக வளர்ச்சி பெற்றன என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.
-
புலவர்களின் மனநிலையையொட்டிய வகையென்றும்,
நாடகப் போக்கானவையென்றும், நாடகக் கதைப்பாட்டு
வகையென்றும், தன்னுணர்ச்சிப் பாடலென்றும் வளர்ந்த,
மாறுதல்
அடைந்த விளக்கங்களை உணர்ந்து
கொண்டிருப்பீர்கள்!
-
சார்பு இலக்கியமும் நேர் இலக்கியமும் எவ்வகையில்
தோன்றும் என்பதையும், நீதியை உணர்த்தும் நூல்களின்
வகைப்பாட்டினையும், இலக்கியமும் வாழ்வும் எவ்வாறு
பின்னிப்
பிணைந்தவை என்பதையும் தெரிந்து
கொண்டிருப்பீர்கள்!
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
‘தூது’ நூலின் உண்மைக் கருத்து யாது? |
|
2.
|
புறப்பொருள் பற்றிய பாடல்கள் பெரும்பாலும்
எப்பொருளைப் பற்றியனவாக இருந்தன?
|
|
3.
|
வெட்சி, கரந்தை, பாடாண்- ஆகிய புறத்திணைகள்
குறித்துச் சுருக்கக் குறிப்பெழுதுக. |
|
4.
|
‘கண்படைநிலை’ - ‘துயிலெடை நிலை’ - விளக்குக. |
|
5. |
பிள்ளைத்தமிழ்த் தோற்றத்திற்கு அடிப்படை யாது? |
|
6. |
அறவுரையாளரின் கடமைக்கும் கலைஞரின்
கடமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
|
|
7. |
நாடகப் பாட்டுகள் என்றால் என்ன?
|
|
|