7) | நாடகப் பாட்டுகள் என்றால் என்ன? |
இலக்கியத்தில்
புலவர்கள் தம் சொந்த உணர்ச்சிகளைப்
பாடாமல், தாம் படைத்த கற்பனை மாந்தரின்
உணர்ச்சிகளைப் பாடும் பாட்டுகள்
நாடகப் பாட்டுகள்
(Dramatic Poetry) எனப்படும்.
எ.கா. நமக்குஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ மறப்பரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே என்னும் குறுந்தொகைப் பாட்டில் (266) தன்னைக் காதலன் மறந்ததாக எண்ணித் துன்புறும் தலைவியின் உணர்ச்சியைக் காணலாம். |