| 4) | அகம் என்றால் என்ன? |
| ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னால், அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், எப்போதும் உள்ளத்தில் உணர்ந்து இன்புறும் பொருள் - உணர்வு - அகம் எனப்படும். |