4) |
தமிழ்ச் செய்யுள் இலக்கிய வகைகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்? |
தமிழ் இலக்கிய வகைகளைப் பொருளடிப்படையில் அகஇலக்கியம், புற இலக்கியம்
எனவும் பாவடிவ வகையால் அகவல், இன்னிசைப்பா, குறள், சிந்து, விருத்தம், வண்ணம், வெண்பா எனவும் இசை அடிப்படையில் கீர்த்தனை, சந்தம், பதம், பாசுரம் எனவும் மரபு மீறிய புதுக்கவிதை, ஹைக்கூக் கவிதை எனவும் உழைக்கும் மக்களின் கவிதைகளான கும்மி, ஊஞ்சல், பந்தடி, ஓடப்பாட்டு, ஏலப்பாட்டு போன்றன நாட்டுப்புறப்பாடல் வகைகளாகவும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தக் காண்கிறோம். |