1)
கதை கூறும் மரபு எவ்வாறு தோன்றியது?
உலகின் அனைத்து நாடுகளிலும் கதை சொல்வதும்
கேட்பதும் மக்களிடையே நெடுங்காலமாக வழக்கில்
இருந்துள்ளன. ஆதிமனிதன் கூட்டமாக வாழத்
தொடங்கிய காலத்தில் சகமனிதரோடு தொடர்பு
கொள்வதற்கு மொழி பயன்படலாயிற்று. தன்னுடைய
கற்பனை வளம் மற்றும் அனுபவத்தின் பயனாலும்
தான் கண்டதையும் கேட்டதையும் பிறருக்கு
விரிவாகச் சொல்லத் தொடங்கிய நிலையில் கதை
கூறும் மரபு தோன்றியதாக அறிகிறோம்.


முன்