4) |
வ.வே.சு. ஐயர் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி என்பதை விளக்குக. |
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி மற்றும் வழிகாட்டி என்றெல்லாம் அழைக்கப்படுபவர் வ.வே.சு. ஐயர் ஆவார். இவர் புதுச்சேரியில் கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் 1917 - ஆம் ஆண்டு “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இதில் ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. பின்னர் மூன்று கதைகளைச் சேர்த்து எட்டுக் கதைகளாக வெளிவந்தது. அத்தொகுப்பு இவரது சிறுகதைகள் முந்தைய மரபுகளிலிருந்து மாறுபட்டிருந்தன. பழைய சம்பிரதாயக் கதைகள் போலல்லாமல் புதிய மரபில் கதையம்சம், வடிவ அமைப்பு, உணர்வு என்ற தன்மைகளோடு கதையைப் புதிய முறையில் தொடங்குவதும் இவரது சிறுகதை உத்தியாக அமைவதால் இவரைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி என்று திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். |