5) | புதுமைப்பித்தனின் சிறுகதைச் சிறப்பம்சங்கள் யாவை? |
புதுமைப்பித்தனின் எழுத்து, தமிழ்ச் சிறுகதையின் போக்கையே மாற்றியமைத்தது. தமிழ்ச்சிறுகதையில் புதுப்புது உத்திகளின் மூலம் கதையைக் கூறியதோடு திருநெல்வேலி வட்டார வழக்கையும் கையாண்டார். மேலும் தத்துவவிசாரணைகள், வருணனைகள், பேச்சுவழக்குகள், தாவிச்செல்லும் நடை மற்றும் இதுவரை சந்தித்திராத புதிய பாத்திரங்கள், மனவுணர்வுகள் ஆகியவற்றில் பல புதுமைகளைப் புகுத்தித் தமிழ்ச் சிறுகதைக்கு வலிவும் பொலிவும் ஊட்டினார். |