6) சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ச்சிறுகதையின்
போக்குகள் யாவை?
சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்
வாய்மொழிக் கதைகளிலிருந்து வேறுபட்டிருந்தன.
வடிவம், உள்ளடக்கம் ஆகிய வற்றில் மாற்றம்
தென்பட்டன. வட்டார வழக்கில் எழுதும்போக்குத்
தோன்றியது. மன உணர்வுகளைப் பகிர்ந்து
கொள்வதாகச்     சிறுகதைகள்     அமைந்தன.
அக்கிரகாரப் பின்னணியே சிறுகதைகளில் அதிகம்
தென்படலாயிற்று. மொழிநடையில் வடமொழி
மற்றும் ஆங்கிலக் கலப்புக் காணப்பட்டது.
பெரும்பாலும் படித்த உயர் வர்க்கத்தினர் மற்றும்
அலுவலகப்     பணியில்     உள்ளோரே
எழுத்தாளர்களாக விளங்கினர்.


முன்