2.6 தொகுப்புரை

    தமிழகத்தின் தனிப்பெரும் இசைக்குழுவாக விளங்கும் மங்கல இசைக்குழு தமிழகத்தின் சிறப்பை உலகறியச் செய்த குழுவாகும்.     ஆலயத்தில்     தோன்றி,     ஆலயத்தால் வளர்க்கப்பட்டு, ஆலயத்தோடு வாழ்ந்து வரும் கலையாகும். தமிழிசையின் தொன்மையையும் சிறப்பையும் வளத்தையும் காப்பாற்றி, வளர்ந்து வருகிறது. தலைசிறந்த கலைஞர்களால் இக்கலை மேம்பட்டது. தமிழகத்தில் தமிழர்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இக்குழு இடம் பெற்று வருகிறது. மிகச்சிறந்த தொடர்ந்திசைக் கருவியாக நாகசுரமும் இராச வாத்தியம் என்ற நிலையில் தவிற்கருவியும், சிறப்பான நாதம் தரும் கஞ்சக் கருவியும், இவை அனைத்தையும் ஒரே சுருதியில் கொண்டு வரும் ஒத்துக் கருவியும் இணைந்த இக்குழுவை மேளம் என்று அழைக்கின்றனர்.

 
     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தவில் பெயர்க்காரணம் கூறுக.
2.
தவில் கருவியைப் பற்றிக் குறிப்பிடும் இலக்கியம் யாது?
3.
செட்டு தவில்காரர் என்றால் என்ன?
4.
மல்லாரி வகைகளுள் மூன்றினைக் குறிப்பிடுக.
5.
தட்டிச் சுற்று - விளக்குக.
6.
தோடி இராகத்திற்குச் சிறப்புச் செய்த நாகசுரக் கலைஞர் யார்?
7.
வாழ்ந்து வரும் நாகசுரக் கலைஞர் சி்லரைக் குறிப்பிடுக.
8. வாழ்ந்து வரும் தவிற் கலைஞர் இருவரைக் குறிப்பிடுக. விடை