1) |
களப்பிரர் யார்? என்பது பற்றியும், அவர்கள்
காலத்துத்
தமிழகச் சூழ்நிலை என்ன? என்பது பற்றியும் அறிந்து
இருப்பீர்கள். |
2) |
தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக்
காலமே பக்தி இயக்கக்
காலம் என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். |
3) |
தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும்
வைணவமும் புறச் சமயங்களான சமண பௌத்தங்களை
வெற்றி கொண்டது எப்படி? - என்பதைத் தெரிந்து
கொண்டீர்கள். |
4) |
தருக்க நெறியையும் அறவியலையுமே அறிவுப்
பூர்வமாக வற்புறுத்திய சமணரும் பௌத்தரும் பக்தி
நெறிக்குத் திரும்பியதற்கான காரணத்தையும் புரிந்து
கொண்டிருப்பீர்கள். |
5) |
தமிழில் இடையறாத் தொடர்ச்சியுடைய ஓர் இலக்கிய
வகையாகத் திகழ்வது பக்தி இலக்கியம் ஆகும்.
அதற்கான மூலகாரணம் பக்தி இயக்கமே என்பது
தெளிவாகப் புலப்பட்டிருக்கும். |
|
|