1) இஸ்லாம் என்பதன் இருவகைப் பொருள் விளக்கங்கள்
யாவை?
இஸ்லாம் என்பது அறபிமொழிச் சொல்லாகும். இச்சொல்லுக்குக்
கீழ்ப்படிதல் மற்றும் கட்டளையை நிறைவேற்றுதல் என்பன
பொருள்கள். எல்லாம் வல்ல இறைவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனது கட்டளைகளை நிறைவேற்றுதல் இஸ்லாமியர்க்குரிய
கடமை என்னும் விரிவான பொருளில் அமைவது ஆகும்.
இஸ்லாம் என்னும் சொல்லுக்குரிய மற்றொரு பொருள் சாந்தி
என்பதாகும். இது சலாம் என்ற சொல்லின் அடியாகத்
தோன்றியதாகும். ஒருவன் இறைவனிடம் முற்றிலும் சரணடைந்து
அவ்விறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் தன்
உடலுக்கும் உள்ளத்திற்கும் சாந்தி தர முடியும். சாந்தி பெற்ற
உள்ளத்தால்தான் சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட
முடியும். இத்தகைய வழிமுறைக்குப் பெயர்தான் இஸ்லாம் என
இருவகை விளக்கங்கள் கூறப்பெறுகின்றன.


முன்