6) |
முதல் மனிதனின் தொட்டில் குமரிநாடே என நிறுவுக. |
மனித இனத்தோற்ற வரலாற்றை ஆய்வுசெய்த அறிஞர்கள் பலரும் மனித குலத்தோற்றம் குமரிப் பெருநாட்டிலிருந்து தொடங்குவதாகக் கூறுகின்றனர். உலகம் தோன்றிய காலத்தில் குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ச்சி அடைந்து அமைந்த நிலப்பரப்பு குமரி நாடு என்றும் இங்குதான் மனிதன் தோன்றி இருக்கக்கூடும் என்றும் ஸ்காட் எலியட் கருதுகின்றார். அவரது கருத்தை ஹெக்கல், தமிழறிஞர் இலக்குவனார் போன்றோர் வழிமொழிவதால் முதல் மனிதராகிய ஆதம் நபியின் தோற்றம் தென்தமிழ்நாடாகிய குமரிநாடு எனத் தெளியலாம். |