4.1 யோவானும் இயேசுவும்

     அன்றைய சமுதாயத்தில் இயேசுவின் மேல் ஆழ்ந்த
தாக்கம்     ஏற்படுத்திய     ஒரே மனிதர் திருமுழுக்கு
யோவானாகத்தான்     இருந்திருக்க     வேண்டும். அவர்
வரப்போகும் அழிவை முன்னறிவித்தார். ஒவ்வொரு மனிதனும்
மனம்மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர்
அறிவித்த செய்தியை இயேசு நம்பினார். யோவான் கூறியதை
ஏற்றவர்கள் குழுவில் அவரும் சேர்ந்தார். யோவானிடம்
இயேசு திருமுழுக்குப் பெற்றார்.

     இயேசு, யோவான் அறிவித்த அடிப்படைச் செய்தியை
ஏற்றுக்     கொண்டார்.     அதாவது,    பேரழிவு     ஒன்று
வரவிருக்கின்றது என்று யோவான் அறிவித்த செய்தியைப்
பொறுத்தமட்டில் இயேசுவுக்கு உடன்பாடு இருந்தது.

     யோவான் அறிவித்த அனைத்தையும் இயேசு அப்படியே
ஏற்றுக்    கொண்டாரா?     நாளடைவில் யோவானின்
கருத்துகளிலிருந்து ஒரு சிலவற்றைப் பொறுத்தமட்டில் இயேசு
வேறுபட்டார். ஆனால் யோவானின் கைகளில் திருமுழுக்குப்
பெறுவதற்கு ஓர் தீர்க்கமான முடிவு எடுத்தார்.

     இஸ்ரயேல் அனைவருக்குமே    எதிராக யோவான்
இறைவாக்கு உரைத்தார். எனவே யோவானின் செய்தியை
ஏற்றுக்கொண்டதால் இயேசு     வேறு பலர் அறிவித்த
செய்தியை ஏற்க மறுத்துவிட்டார் எனலாம்.