1) |
தொடக்ககாலக் கிறித்துவத்தின் சிறப்பு யாது? |
இயேசுபெருமான்
அளித்த நற்செய்தியினை ஏற்றுப் புதியதொரு சமுதாயம் படைத்திட வேண்டும் என்ற அருங்கருத்தின்பால் செயல்பட்டதே கிறித்துவம். தொடக்கத்தில் கிறித்துவம் ஆன்மிகக் கோட்பாட்டினை மட்டும் ஏற்றுக்கொண்ட ஓர் அமைப்பாக விளங்கவில்லை. அது ஒடுக்கப்பட்டோருக்காகச் சுரண்டும் வர்க்கத்தினை எதிர்த்திடும் இயக்கமாகவே தோன்றி வளர்ந்தது. |