5) | தொடக்க காலக் கிறித்துவத்தின் சிறப்பியல்புகள் யாவை? |
கிறித்துவம்
தொடக்க காலத்தில் இறைமக்களை உள்ளடக்கிய ஒரு பேரியக்கமாகவே விளங்கியது. அரசியல், சமுதாயம், பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டோரின் கூட்டுறவாகவே இருந்தது. உடல் உழைப்பின் பயனால் வாழ்க்கை நடத்தியவர்களே தொடக்ககாலத் திருச்சபையின் உறுப்பினர்களாக விளங்கினர். திருச்சபை இவர்களின் முழுவிடுதலை நோக்கில் செயல்பட வேண்டியதிருந்தது. திருச்சபை என்னும் இவ்வமைப்பு ஏழைகளுக்கும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும் முன்னுரிமை தந்து போராட வேண்டிய ஓர் அமைப்பாக இருந்துவந்ததால் ஆளும் வர்க்கத்தினரால் கடுந்தொல்லைகளுக்கு ஆளானது. |