6) புனித தோமையாரின் சமயப் பணிகள் யாவை?்
கிறித்துவ சமயம் தான் தோன்றிய முதல்
நூற்றாண்டிலேயே இந்தியாவிலும் காலூன்றியது.
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான
புனித தோமையார் இந்தியாவிற்கு மறை பரப்ப
வந்தார்.     இந்தியாவில்     அவர்     முதலில்
திருவிதாங்கூரிலும் பின்னர்ச் சென்னையை அடுத்த
மைலாப்பூரிலும் பணியாற்றினார். இந்தியாவில் அவர்
முதன்முதலாகக் கேரளாவில் உள்ள கிரங்கனூர் என்ற
இடத்திற்கு     வந்து     சமயப்பணியினைக்
கடற்கரையோரமாகத்     தொடங்கினார். இவரது
நற்செய்தியை உணர்ந்து மனந்திரும்பிய மக்கள்
கிறித்துவ சமயம் சார்ந்தனர். இன்று கேரளாவில்
உள்ள மார்த்தோமா மற்றும் சிரியன் திருச்சபைகள்
தோமையரால் தொடங்கப்பட்டவையாகும்.


முன்